அவ அப்படி தான் – அனிதா சம்பத் குறித்து உடன் பணியாற்றிய செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் போட்ட பதிவு.

0
31311
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள் அதில் அனிதா சம்பத் ஒருவர் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

இன்னைக்கு #அனிதா சொன்னது அத்தனையும் எனக்கு தெரிஞ்சி #உண்மை… அவர் முதன் முதலில் செய்தி வாசிக்க கத்துக்கிட்டது பாலிமரில….

Ranjith ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಅಕ್ಟೋಬರ್ 8, 2020

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அனிதா சம்பத் சுரேஷ் சக்ரவர்த்தி விவகாரத்தில் அனிதா சம்பத்தின் பெயர் கொஞ்சமாக டேமேஜ் அடைய துவங்கியிருக்கிறது. இந்த பிரச்னையில் சுரேஷ் சக்கரவர்த்தி அமைதியாக இருந்தாலும் அனிதா சம்பத் எதாவது பேசி பிரச்சனையை தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்துடன் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ரஞ்சித், அனிதா சம்பத் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், இன்னைக்கு அனிதா சொன்னது அத்தனையும் எனக்கு தெரிஞ்சி உண்மை. அவர் முதன் முதலில் செய்தி வாசிக்க கத்துக்கிட்டது பாலிமரில. நாங்க அப்போ அடிக்காத லூட்டியே இல்ல. மேக் அப் ரூம தாண்டி சிரிப்பு சத்தம் வெளிய கேட்டு நெறைய பேரு ஓடி வந்து பாப்பாங்க. அப்போ அவ பட்ட கஷ்டத்த என் கிட்ட நெறைய தடவ சொல்லி இருக்குறா.

எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியா இருக்காளோ அவ்வளவு ஷார்ட் டெம்பர். ஏற்கனவே அனிதா சம்பத் குறித்து தற்போது அனிதா சம்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவனித்து வரும் அவரது கணவர் அனிதா சம்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஞ்சித் சொன்னது போல ‘அனிதா சம்பத்திற்கு அதிக கோபம் வரும்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement