டிவி இல்லாததால் மகளின் என்ட்ரியை பக்கத்து வீட்டு டிவியில் பார்த்தேன் – பிக் பாஸ் போட்டியாளரின் தந்தை அளித்த உருக்கமான பேட்டி.

0
95138
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல செய்தி தொகுப்பாளினியான அனிதா சம்பத்தும் ஒருவர் bigboss3 அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது ஆனால் பிக் பாஸ் இன் ஆரம்பத்தில் இவரது பெயர் கொஞ்சம் சர்க்கரை சந்தித்தது இப்படி ஒரு நிலையில் தனது மகள் பிக்பாஸில் கலந்து கொண்டதை பக்கத்து வீட்டு டிவியில் பார்த்ததாகக் கூறியுள்ளார் அவரது தந்தை

-விளம்பரம்-

இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னுடைய சொந்த ஊர் திருவாரூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆனால் இப்போது குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறோம் நான் மட்டும் அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று வருவேன் சென்றால் அங்கே தங்குவதற்கு ஒரு வீடு இருக்கிறது அந்த வீட்டில் டிவி கிடையாது முக்கியமான சில வேலைகள் இருந்ததால் லாக்டோன் தொடங்குவதற்கு முன்பு ஊருக்கு போயிருந்தேன் அங்கே சென்ற சில நாட்களில் ஊரடங்கு போட்டுவிட்டதால் சென்னை திரும்ப முடியாமல் அங்கேயே இருந்து விட்டேன்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் துவங்கியபோது என்னை பிக் பாஸ் என்று அழைக்கிறார்கள் அப்பா என்று என்னுடைய மகள் சொல்லிக் கொண்டு இருந்தாள் எந்த முடிவையும் தெளிவாக எடுக்கும் பெண் என்பதால் எது சரி என்று தோன்றுகிறதோ அதே பண்ணுமா என்று சொல்லிவிட்டேன் முதல்நாள் நிகழ்ச்சியில் என் பெயரை எல்லாம் கமல் சாரிடம் சொல்வார் என்று எனக்கு தெரியாது என் மகள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசையாகத்தான் இருந்தது என்னுடைய ஊர் கிராமம் என்பதால் அங்கே சீரியல்களை விரும்பிப் பார்ப்பார்கள் அதனால் என்ன செய்வது என்று யோசித்து தயங்கித் தயங்கி பின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என் மகள் டிவியில் வராலாம் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளலாமா என்று நினைத்துதான் பக்கத்து வீட்டிற்கு போனேன்.

anitha

ஆனால், நல்லவேளையாக அங்கே பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கப் போவதாக சொன்னார்கள், பின்னர் சரி என்று அங்கேயே உட்கார்ந்து என்னுடைய மகள் வரும் வரைக்கும் பார்த்தேன். பிக்பாஸ் மேடையில் கமல் சாரிடம் என் பெயரை அவள் சொன்னபோது என்னை அறியாமல் என் கண்ணில் தண்ணீர் வந்தது. என் பக்கத்து வீட்டுக்காரரோ இருந்து முடியும் வரை பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஆனாலும் என் மகள் வந்த வரைக்கும் பார்த்து விட்டு கிளம்பி விட்டேன் என்று மிகவும் உணர்ச்சி பொங்க கூறியிருக்கிறார் அனிதா சம்பத் தந்தை.

-விளம்பரம்-
Advertisement