உங்களுக்கு ஒரு நியாயம் ஆரிக்கு ஒரு நியாயமா ? அனிதாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள். காரணம் இது தான்.

0
2121
anitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 11 வாரத்தை நிறைவு செய்து 12 வாரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மாட்னயா நீ ‘ என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்ட்டு இருந்தது. இதில், இதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு சீட்டை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் கேள்வியை கேட்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் ஷிவானி, ஆரியிடம் ‘இந்த வீட்டில் யார் Demotivated -அ இருகாங்கனு நீங்க feel பண்றீங்க என்று கேட்டிருந்தார்’ அதற்கு ஆரி, அனிதாவின் பெயரை சொல்லி, எங்க வீட்டில் என்ன நினைத்தகொள்வார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு அனிதாவின் கணவர் பிரபா பெயரை சொல்ல ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

ஆனால், ஆரி இப்படி பேசி முடித்ததும் அனிதா, என்னுடைய அம்மா, அப்பா, குடுமபத்தினர் பற்றி பேசாதீர்கள் என்றுகூறி இருந்தார் . அதற்கு ஆரி, நான் பேசி முடித்த பிறகு தான் முடியும் நான் என்ன சொல்ல வந்தேன் என்று கூற, அதற்கு கடுப்பான அனிதா , நீங்கள் சொல்லி முடிக்கும் வரை எல்லாம் காத்திருக்க முடியாது. நான் மட்டும் தான் இங்கே விளையாட வந்திருக்கிறேன். எனவே, என்னை பற்றி மட்டும் பேசுங்கள்.குடும்பத்தில் இருப்பவர்களை பற்றி கமல் சார் பேச வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்று கூறிய அனிதா, ஒரு கட்டத்தில் என் புருஷன் பற்றியும், அம்மா அப்பா பற்றியும் பேசாதீர்கள் ஆரி, என்று கையை நீட்டி உதட்டை கடித்து எச்சரிக்கை செய்து இருந்தார் அனிதா. அதன் பின்னர் ஆரி, பேசுவதையே நிறுத்திவிட்டார்.

- Advertisement -

அனிதாவின் இந்த செயலை பலரும் விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அனிதா சம்பத் பாலாஜியை சுவாரசியம் குறைவான போட்டியாளராக பாலாஜியை தேர்ந்தெடுத்தார். ஆனால், அனிதா சொன்ன காரணம் பாலாஜிக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் பதிலுக்கு பாலாவும் விவாதித்தார். ஆனால், அனிதா சம்பத்தோ ‘நான் தான் இங்கே நாமினேட் செய்து கொண்டு இருக்கிறேன் எனவே எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் நான் பேசுவேன் நாமே செய்யும்போது குறுக்கிடாதீர்கள்.

நீங்கள் மட்டும் அனைவரும் பெயரை சொல்வீர்கள் உங்கள் பெயரை யாரும் சொல்லக்கூடாதா என்று வாக்குவாதம் செய்தார் அனிதா’ ஆனால், ஆரி, அனிதாவை நாமினேட் செய்த போது நான் பேசி முடித்த பின் நீங்கள் பேசுங்கள் என்றார். அதற்கு அனிதா, நீங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் அனிதாவை விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement