தன்னை நினைத்து அழுத மனைவியை எண்ணி எமோஷனான அனிதா சம்பத்தின் கணவர்.

0
4266
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள் அதில் அனிதா சம்பத் ஒருவர் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதேபோல இவர் பிக்பாஸ் வீட்டில் தனக்கு பேச வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று அடிக்கடி கூறிக் கொண்டு வருகிறார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் அதிகம் பேசும் நபர்களில் இவர்தான் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் கூட அனிதா சம்பத் சொன்ன கதையைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் ‘போதும்டா சாமி’ என்ற அளவிற்கு சிந்தித்து விட்டார்கள். ஒரு கட்டத்தில் அனிதா சம்பத் பேச்சு தாங்க முடியாமல் சம்யுக்தா, அனிதா பேச்சை நிறுத்திக் கொள்ளுமாறு கூறி இருந்தார்.

- Advertisement -

அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் இப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும் அவரது கணவர் குறித்து பேசாமல் இருந்ததே இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனிதா சம்பத் சுமங்கலி மற்றும் அமங்கலி குறித்து பேசிய விஷயம் போட்டியாளர்களிடம் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது இதனால் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அனிதா சம்பத் ஒரு கட்டத்தில் சுரேஷிடம் மன்னிப்பு கூட கேட்டிருந்தார் ஆனால் சுரேஷ், அனிதா சம்பத் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை, இதனால் அனிதா சம்பத் தொடர்ந்து அனைவரிடமும் புலம்பிக்கொண்டு இருந்தார், ஒரு கட்டத்தில் அனிதா சம்பத் கனபெஷன் ரூமிற்கு அழைத்து பிக்பாஸ் அறிவுரை வழங்கியிருந்தார்.

அப்போது அனிதா சம்பத்தின் கணவர் அவரை கேட்டதாக பிக்பாஸ் கூறினார் உடனேயே தனது கணவரை எண்ணி தேம்பித் தேம்பி அழுதார் அனிதா சம்பத்.நேற்றைய நிகழ்ச்சியில் கூட தனது கணவர் தன்னை கண்ணுக்குட்டி என்று எப்போதும் அழைப்பார் என்று சொல்லியிருந்தார் அனிதா சம்பத். இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேம்பித் தேம்பி அழுத அனிதா சம்பத் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ள அனிதா சம்பத் கணவர் அனைத்தும் சரியாகிவிடும் கவலைப்படாதே செல்லம்மா என்று தனது மனைவிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement