குக்கு வித் கோமாளி 3ல கூப்டா கூட போக மாட்டேன், அதுக்கு காரணம் – பிக் பாஸ் நடிகை அனுயா பேட்டி.

0
6457
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-150-1024x998.jpg

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரத்தில் நிறைவடைய இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

மேலும், குக்கு வித் கோமாளி சீசன் எப்போது வரும் என்று இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டனர். இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் தனக்கு வாய்ப்பு வந்தாலும் செல்ல மாட்டேன் என்று நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான அனுயா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுயா.

வீடியோவில் 3 : 38 நிமிடத்தில் பார்க்கவும்

அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்த சுச்சி லீக்ஸின் போது ஆபாச புகைப்பட சர்ச்சையில் சிக்கினார். மேலும், பிக் பாஸ் சீசன் 1ல் கூட கலந்துகொண்டார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி 3யில் வாய்ப்பு கிடைத்தால் போவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, எனக்கு அதிகம் தமிழ் தெரியாது. தமிழில் காமெடி செய்வது கொஞ்சம் கஷ்டம் என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement