பிக் பாஸ் ‘ப்ளீஸ்’ எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க .! கேட்டது யார் தெரியுமா.? புகைப்படம் உள்ளே.!

0
2326
Bigg-Boss

இரவு ஒன்பது மணி ஆனாலே பல பேரை டி.வி. முன்னாடி கட்டிப் போட்டது பிக் பாஸ்.16 போட்டியாளர்கள் , 30 கேமராக்கள், 100 நாள்கள் என விறுவிறுப்பாக சென்றது இந்த நிகழ்ச்சி. பிக் பாஸ் மூலமாக சின்னத்திரைக்கு முதன் முதலாக தொகுப்பாளராக அறிமுகமானார் நடிகர் கமல். இவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதாலேயே பலரும் ஆரம்பத்தில் நிகழ்ச்சியைப் பார்த்தனர். முதலில் பலருக்கும் நெருடலாக இருந்த இந்த நிகழ்ச்சி, அதில் பங்கேற்ற போட்டியாளர்களின் லூட்டிகள், கண்ணீர்கள், சண்டைகள் என பல எமோஷனல் டச்சால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Bigg Boss

- Advertisement -

சினேகன், பரணி, கணேஷ் வெங்கட்ராம்,. காயத்ரி ரகுராம், ஆர்த்தி, வையாபுரி, அனுயா, ரைசா, ஆரவ், நமீதா, ஓவியா, ஹரீஸ் கல்யாண் என பலரும் இதில் போட்டியாளராக வந்த நிலையில், பொதுமக்களில் இருந்து ஒருவராக ஜல்லிக்கட்டு ஜூலி போட்டியின் உள்ளே சென்றார். பல வைரல் கன்ட்டென்ட்களுடன் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட பிக்பாஸ், இப்போது இரண்டாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. வருகிற ஜூன் 17-ம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகை அனுயாவிடம் பிக்பாஸ் அனுபவம் பற்றி பேசினோம்.

“ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். புனேயில்தான் என்னோட வீடு இருக்கிறது. அங்கே நான் இருக்கும்போது சேனல் தரப்பிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். கமல் சார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் உடனே ஓகேனு சொல்லிட்டேன். அந்த வீட்டுக்குள்ளே போகுற வரைக்கும் யாரெல்லாம் கலந்துக்குவாங்கனு தெரியாது. பிக் பாஸ் பத்தி ஒன்னுமே தெரியாமல்தான் உள்ளே போனேன். எனக்கு அந்த வீடு பிடிச்சிருந்துச்சு. ஆனா, அந்த வீட்டுக்குள்ளே இருக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை.

-விளம்பரம்-

anuya

ஏன்னா, நம்மை சுத்தி எப்போவும் கேமரா ஓடிக்கிட்டே இருக்கும். அதை சமாளிச்சு நம்ம இருக்கிறது கஷ்டம். இத்தனை கேமராக்களை இதுக்கு முன்னாடி எங்கேயும் நம்ம வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டோம். மத்தப்படி வீட்டை க்ளீன் பண்றது, சமைக்குறது, துணி துவைக்குறது, டாஸ்க் இதெல்லாம் கஷ்டம் இல்லை. எனக்கு பெரிய கஷ்டமா இருந்தது தமிழ் பேசணும்னு சொன்னதுதான். ஏன்னா, என்னால தொடர்ந்து தமிழ் பேச முடியாது; சரளமா வராது. அதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனாலதான் ஆறே நாளில் வெளியே வந்துட்டேன். உள்ளே இருந்திருந்தா பெஸ்ட் போட்டியாளரா நானிருந்திருப்பேன். ஏன்னா, யாரையும் பத்தி தேவையில்லாம நான் பேசி இருக்க மாட்டேன்.

பிக் பாஸ் வீட்டில் என்னோட ஃபேவரைட் போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராம். அவர்தான் ஜெயிப்பார்னு நினைச்சேன். பட், மிஸ் ஆயிருச்சு. பிக் பாஸ் பார்த்த நிறைய பேர், “நீங்கதான் பெஸ்ட் போட்டியாளார்”னு சொன்னாங்க. ஏன்னா, சீக்கிரமே வீட்டை விட்டு வெளியே வந்ததனால. ஆறு நாளுல அந்த வீட்டை பத்தி முழுசா புரிஞ்சிக்க தெரியல. எனக்கு செகண்ட் சான்ஸ் கிடைச்சா பிக் பாஸ் போட்டியாளரா உள்ளே போகத் தயாரா இருக்கேன்.

anuya actress

ப்ளீஸ் எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. ஆனா, மறுபடியும் சொல்றேன் அங்கே இருக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை. சீசன் 2 போட்டியாளர்கள் யாருனு எனக்குத் தெரியல. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடனே நேரா புனே வீட்டுக்குப் போயிட்டேன். யாரையும் மீட் பண்ணல. ஃபைனல் அன்னைக்கு வந்தப்போதான் எல்லாரையும் பார்த்தேன். ஆனா, இடையில நடிகர் ஜீவாவை மீட் பண்ணி பேசுனேன். இப்போ ரெண்டு படம் நடிச்சிட்டு இருக்கேன். அந்தப் படங்களைப் பத்தி நிறையப் பேச முடியாது”னு சொல்லி முடித்தார் நடிகை அனுயா.

English Overview:
Here we have interview with actress Anuya who is a participant of Bigg Boss season one Tamil. She said that she is willing to participate in season two also. To get frequent updates and participants list of Bigg Boss season 2 Tamil and to save contestants who are in elimination please check Bigg Boss vote Tamil link.

Advertisement