விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இருக்கிறது.இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நோமினேஷனில் சோம் ,கேப்ரில்லா,ஜித்தன் , நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். . எனவே, கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ்ஷை வெளியேற்றி இருந்தார். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் நிஷா வெளியேறினார். ஒரே சமயத்தில் தங்களது குரூப்பை சேர்ந்த 2 பேர் வெளியேறியதால் அர்ச்சனா குழு கடும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.
இதையும் பாருங்க : அட, குக்கூ வித் கோமாளி 2 கனி இந்த பிக் பாஸ் நடிகையின் அக்கா தானா – இவரின் உண்மையான பெயர் கனி இல்லையாம்.
இப்படி ஒரு நிலையில் நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய நிஷா கடந்த 70 நாட்களாக பிரிந்து இருந்த தனது குழந்தையை கட்டிப்பிடித்து அன்பு முத்தம் கொடுத்தார். அதன் பிறகு ’வெல்கம் டு அறந்தாங்கி நிஷா’ என்ற வாசகம் கொண்ட கேக்கை நிஷா குடும்பத்தினர் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்த வீடியோவை தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ள நிஷா, அன்பு உறவுகளுக்கும் வணக்கம் நான் யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைத்தேன் என்று நான் காயப்பட்டு விட்டுவிட்டேன் தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை விட நிஷா வெளியேறியதற்கு முக்கிய காரணம் அர்ச்சனா தான் என்று பலரும் கூறி வருகிறார்கள். நிஷா, பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை தன்னுடைய விளையாட்டை விளையாட வேண்டும் என்று கமல் அடிக்கடி கூறிக் கொண்டுதான் இருந்தார். ஆனால், கடைசி வரை நிஷா அர்ச்சனா குழுவில் கைப்பாவையாக தான் இருந்தார். என்னதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தாலும் இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய விளையாட்டை பிடிக்காமல் தான் மக்கள் இவரை வெளியேற்றினார்கள் தவிர இவர் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தவறையும் பிக் பாஸ் வீட்டில் செய்தது இல்லை என்பதுதான் பலரின் கருத்து.