‘அப்பாவான ஆரவ்’ – என்ன குழந்தை தெரியுமா ? குவியும் ரசிகர்களின் வாழ்த்து.

0
343
arav
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-64.jpg

ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் ஆரவ். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த திருமணத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல ஆரவ்வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பிந்து மாதவி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட் ராமன், ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம் சுஜா வருணி என்று பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அதே போல பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் ஆரவ்விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர். அதே போல திருமணம் முடிந்து சில மாதங்களில் கர்ப்பமான ஆரவ் மனைவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் சீமந்தம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் ஆரவ் மனைவி இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆரவ்விற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement