யார் என்ன சொன்னா என்ன.! 90Ml படத்தை பற்றி ஆரவ் போட்ட டீவீட்டால் ஓவியா குஷி.!

0
1084
Oviya-Arav
- Advertisement -

பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பேரும் பபுகழையும் ஏற்படுத்தி தந்தது அந்த நிகழ்ச்சி என்பது தான் உண்மை. இருப்பினும் அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு எந்த ஒரு பட வாய்ப்பும் இவரை தேடி வரவில்லை. 

-விளம்பரம்-

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது ஓவியா 90 Ml படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து. இந்த படத்தின் ட்ரைலரில் ஓவியா, புகைபிடிப்பது தண்ணி அடிப்பது, லிப் லாக் என்று நடித்துள்ளதால் ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் ஆரவ். பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை காதலிக்கவில்லை என்று சொன்ன ஆரவ் தற்போதும் ஓவியவுடன் பழகி தான் வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது ஓவியா நடித்துள்ள 90 ml படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆரவ், இந்த படம் உனது கேரியரில் ஒரு மிகபெரிய படமாக இருக்கும். இந்த படத்திற்காக நீ போட்ட உழைப்பு என்னவென்று எனக்கு தெரியும். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஓவியா. உன்னுடன் எப்போதும் நான் இருப்பேன்.

Advertisement