என்னது அபிநய்கும் அர்ச்சனாவிற்கு இப்படி ஒரு உறவா – முதல் முறையாக கூறிய அர்ச்சனா.

0
560
archana
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை விளங்குகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் பல ஆண்டு காலமாக மிகப்பிரபலமான தொகுப்பாளினியாக திகழ்பவர் அர்ச்சனா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் அர்ச்சனா சன் தொலைக்காட்சிக்கு சென்றார். அங்கு இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சில வருடம் இவர் மீடியாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு 2009 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். விஜயில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல வருடமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அர்ச்சனாவுக்கு ஜீ தமிழ் சிறந்த தொகுப்பாளர் என்ற விருதையும் வழங்கி இருக்கிறது. மீண்டும் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா:

2020 ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா போட்டியாளராக நுழைந்தார். நிகழ்ச்சியில் இருந்து அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று பல்வேறு விமர்சனங்கள் கூட எழுந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா:

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் படத்தில் அர்ச்சனா நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் இஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

அர்ச்சனா பதிவிட்ட புகைப்படம்:

அதே போல இவர் வாவ் லைப் என்ற யூடுடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த யூடுயூ சேனலில் தனது தங்கை மற்றும் தனது மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார் அர்ச்சனா. இந்த நிலையில் அர்ச்சனா பதிவிட்டு இருக்கும் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அர்ச்சனா, பிக் பாஸ் பிரபலம் அபிநய் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, எங்கள் அம்மாக்கள் ஒன்றாக படித்தவர்கள். அதனால் நாங்கள் இருவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

வைரலாகும் அர்ச்சனா-அபிநய் புகைப்படம்:

இப்படி இவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் என்று சொல்லலாம். இதுவரை அர்ச்சனா இதை சொன்னதே கிடையாது. முதல் முறையாக அர்ச்சனா அபிநய் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சொல்லி இருக்கிறார். மேலும், அபிநய் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அது மட்டுமில்லாமல் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிநய் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பின் தற்போது நடந்து கொண்டிருக்கும் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து சமீபத்தில் தான் அபிநய் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement