விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 66 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதை விட சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. காரணம் சனம் ஷெட்டியை விட மோசமாக விளையாடி வரும் நிஷா, ஷிவானி எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர்.
இந்த சீஸனின் அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார்.
இவர் உள்ளே நுழைந்த நாள் முதலே தனக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் மேலும் இவர் எதை செய்தாலும் சரி என்று சொல்வதற்காகவே இருப்பது போல தான் ரியோ, நிஷா, சோம் ஆகியோர் இருக்கின்றனர். மேலும், அர்ச்சனா ஒரு குரூப்பை அமைத்து விளையாடி வருகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதை பல முறை கமலே கூறியிருக்கிறார். அதிலும் கடந்த சில வாரங்களாக இவரது குரூப்பீசம் பஞ்சாயத்து சர்ச்சையாக வெடித்து வருகிறது.
மேலும், கடந்த சில வாரங்களாக அர்ச்சனா, ஆரியை தான் டார்கட் செய்து வருகிறார். மேலும், அரிக்கு பின்னால் புறம் பேசும் அர்ச்சனா அவரை வாடா போடா என்று ஒருமையில் தான் பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா, ரம்யா, நிஷா, ஷிவானி ஆகியோர் ஆரியை கிண்டல் செய்யும் வகையில் பாடலை பாடி உள்ளார்கள், அதிலும் ரம்யா பாண்டியன், ஆரி நீ வேற மாதிரி, நீ ஒரு அறுவை என்று கொஞ்சம் ஓவாராகவே பாடி கேலி செய்துள்ளார்.