ஆரிக்கு எதிராக சம்யுக்தாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி பாலாஜியை காப்பாற்ற அர்ச்சனா போட்ட திட்டம் – Unseen வீடியோ.

0
8565
archana
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வரமாகவே குரூப்பீசம் பற்றி பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, ரியோ, சோம், ஜித்தன் ரமேஷ், கேப்ரில்லா ஆகியோர் ஒரு குரூப்பாகவும் பாலாஜி, ஆஜீத், சம்யுக்தா, ஷிவானி ஆகியோர் ஒரு குரூப்பாகவும் இருந்து வருகின்றனர். இதில் அர்ச்சனா குரூப்பை வேல் குரூப் என்று அவர்களே சொன்னார்கள். இந்த குரூப்பில் அர்ச்சனா தான் தலைவராக இருந்து வருகிறார். அவர் ஆட்டி வைப்பது போலத் தான் மற்றவர்கள் ஆடுகிறர்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
archana

அதனை உறுதி செய்யும் விதமாக நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் கால் சென்டரில் இருக்கும் நபர்களுக்கு வீட்டில் உள்ள யார் வேண்டுமானலும் போன் செய்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் முதல் அழைப்பாக பாலாஜிக்கு அர்ச்சனா கால் செய்து இருந்தார். மேலும், அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பாலாஜி பொறுமையாக பதில் கூறியதால் அர்ச்சனா அடுத்த வாரம் நாமினேட் ஆனார்.

- Advertisement -

இந்த டாஸ்க்கிற்கு பின்னர் அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. மேலும், இனி என்னை அக்கா என்று அழைக்காதே அர்ச்சனா என்று மட்டும் கூப்பிடு என்று அர்ச்சனா பாலாஜியிடம் அனைவர் முன்பும் கூறினார். ஆனால், உண்மையில் பாலாஜியை காப்பாற்ற அர்ச்சனா ஏற்கனவே திட்டம் தீட்டி இருக்கிறார் என்பது Unseen வீடியோவில் வெளிச்சமாகி இருக்கற்து. அதில் இந்த டாஸ்க்கிற்கு முன்பாக அர்ச்சனா, சம்யுக்தா, நிஷா ஆகிய மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்போது சம்யுக்தா, யார் முதலில் கால் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்துவிடீர்களா என்று கேட்கிறார். அதற்கு நான் முதலில் செல்கிறேன் என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை சொன்ன அர்ச்சனா, பாலாவிற்காகஆரி, கண்டிப்பாக வருவார். அப்படி நடந்தால் பாலாஜி கண்டிப்பாக தோற்றுவிடுவான். அதனால் பாலாவிடம் நான் பேசுகிறேன். நான் நாமினேட் ஆனாலும் பரவாயில்லை பாலாஜி வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement