எதுக்கு பிக் பாஸ் போனீங்க – ரசிகர் கேட்ட கேள்விக்கு மகளை கேட்டு பதில் சொன்ன அர்ச்சனா.

0
987
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவும் ஒருவர். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதே போல இவர் முதன் முதலில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார்

-விளம்பரம்-
archana

மேலும், தமிழில் கூட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இதனால் சமூக வலைதளத்தில் அடிக்கடி இவரை விமர்சித்து வருகின்றனர். இதனாலேயே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எந்த பேட்டியிலும் பங்கேற்கவில்லை.

இதையும் பாருங்க : உங்க இசைக்காக தான் உங்கள பாலோ பண்றோம், இஸ்லாம் போதனை செய்ய வேண்டாம் – விமர்சனத்திற்கு யுவன் கொடுத்த பதிலடி.

- Advertisement -

ஆனால், இஸ்னாட்க்ராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘நீங்க ஏன் பிக் பாஸுக்கு போனீங்க’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தன் மகளிடம் ‘ஏன் போனேன்’ என்று அர்ச்சனா கேட்க, அதற்கு அவரது மகளும் இதுவேற ஏன் போனோம்னு எங்களுக்கே தெரியாது என்று கூறியுள்ளார்.

Fans ask Archana why did she go to Bigg Boss Tamil 4; here's her reply

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களமிரங்கி இருக்கிறார்.அந்த வகையில் சமீபத்தில் இவர் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு எபிசோடு ஒளிபரப்பானது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வந்த போதே அர்ச்சனா தொகுப்பாளினியாக இருப்பதை பார்த்த பலரும் அர்ச்சனாவை இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக போட வேண்டாம் என்று கமன்ட் செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement