உங்க இசைக்காக தான் உங்கள பாலோ பண்றோம், இஸ்லாம் போதனை செய்ய வேண்டாம் – விமர்சனத்திற்கு யுவன் கொடுத்த பதிலடி.

0
781
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

இதையும் பாருங்க : புலம்பினேன், ஒப்பாரி வச்சேன், ஆனா நீங்க – பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி வெளியிட்ட உருக்கமான வீடியோ. (ஏன்யா இந்த மனுஷன இப்படி பண்றீங்க)

- Advertisement -

இஸ்லாம் பெண்ணை மூன்றாம் திருமணம் செய்த்க்கொள்ள தான் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால், கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யுவனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.அதில், உங்களின் மோசமான பயம் எது? அதிலிலிருந்து நீங்கள் எப்படி மீண்டீர்கள் என்று கேட்டிருந்தார். அந்த ரசிகர் அதற்கு பதில் அளித்த யுவன், நான் இஸ்லாமிற்கு மாறுவதற்கு முன்னர் தற்கொலை செய்து கொள்ளலாமல் என்று கூட யோசித்திருக்கிறேன்.

ஆனால், இஸ்லாம் தான் எனக்கு அதிலிருந்து மீள உதவியது என்று கூறி இருந்தார் யுவன். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவன் ஷங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில்குர்ரான் பற்றிய பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர் மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள் என்று பதிவிட்ட சில சர்ச்சையான கமெண்டுக்கு பதில் அளித்தார் யுவன்சங்கர்ராஜா. யுவனின் இந்த பதிவிற்கு கீழே முகநூல் வாசி ஒருவர் நாங்கள் அனைவரும் உங்களின் இசைக்காக தான் உங்கள் பேஸ்புக்கை பின் தொடர்கிறோம், மத பிரச்சாரத்திற்கு அல்ல. நான் உங்களை தொடர வேண்டுமா ? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இவன் நீங்கள் என்னை பின் தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அதே போல நான் ஒரு இந்தியன் நான் ஒரு தமிழன் நான் ஒரு முஸ்லிம், அரபியாவில் மட்டும்தான் முஸ்லிம்கள் இருக்கவேண்டுமா என்ன ? நம்பிக்கைக்கும் மத வெறிக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் என்ன புரிந்து கொள்ளப் போகிறீர்கள். இதை நான் அனைவருக்கும் சொல்ல வேண்டிய நேரம் இது. ஏனென்றால் இந்த வெறுப்பை நிச்சயம் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement