அவன் என்னை உருவ கேலி செய்தான் – நேற்றய நிகழ்ச்சியில் பாலாஜி பற்றி பேசிய அர்ச்சனா. Unseen வீடியோ இதோ.

0
6988
balaji

பிக் பாஸ் வீட்டில் தற்போது அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் இடையிலான பிரச்சனை தான் மிகவும் கொழுந்துவிட்டு எரிகிறது. அர்ச்சனா உள்ளே நுழைந்த நாள் முதலே அனைத்து விஷயங்களுக்கும் மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் போட்டியாளரை இல்லை ஆங்கரா என்பது போல ஒரு சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அவ்வளவு ஏன் கமல் கூட அர்ச்சனாவிடம் அவர் செய்யும் நாட்டாமை வேலையை மறைமுகமாக கேலி செய்து இருந்தார். இருப்பினும் அர்ச்சனாவிற்கு ரியோ போன்றவர்களின் ஆதரவு இருந்து வருவதால் அவர் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்து கொண்டிருந்தார்.

நேற்றைய நிகழ்ச்சியில் கிளீனிங் டீமில் இருந்த பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை வீட்டை பெருக்க மீனிங் டீமில் இருந்த வேல்முருகன் அஜித் ஆகியோர் எழுப்பினார்கள் அப்போது பாலாஜி தூக்கத்தில் எழுப்பி வேலை செய்ய செல்வது சரியான விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். அர்ச்சனா, பாலாஜியை அழைத்து வரவில்லையா என்று கேட்க பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பாலாஜி வேலை செய்தார். இதனால் அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது பாலாஜி கேப்டனாக இருந்தால் என்ன கொம்பு முளைத்து விடும் ஒருவர் உடல்நிலை முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை எழுப்பி வேலை வாங்குவீர்களா அடுத்த வாரம் நான் கேப்டனாக வந்தால் அனைவரையும் அம்மி அரைக்க விடுகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் பாலாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். அதிலும் குறிப்பாக ரியோ மற்றும் அர்ச்சனா பாலாஜியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா மற்றும் பாலாஜி சமாதானம் ஆகினார்கள்.

இப்படி ஒரு நிலையில் நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ ஒன்றில் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் பேசும் போது, நான் வீட்டுக்கு வந்த முதல் நாளே பாலாஜி தன்னை உருவ கேலி செய்துள்ளதாக கூறியுள்ளார். தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போதே வெயிட்டா ஒரு தல வலி வந்திருக்கு என்று சொன்னான். அதே போல பல முறை தல வலி என்று சொன்னான். ஆனால், அவனுக்கு முதலில் காபி பொடுகுடுத்தவள் நான். எனக்கு அவன் சமையலின் போது செய்த உதவி கூட உபத்தரமாக தான் இருந்தது என்று கூறியுள்ளார் அர்ச்சனா.

-விளம்பரம்-
Advertisement