இந்த காரணத்தால் எனக்கு நண்பர்களே இல்ல, பேட்டியில் கலங்கிய அர்ச்சனாவின் மகள் சாரா – அர்ச்சனாவின் ஆதங்க பேச்சி.

0
443
archana
- Advertisement -

90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is jvhg-1024x573.jpg

தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘இதுல எது ஒரிஜினல்’ – தன் தத்ரூப மெழுகு சிலையை கண்டு வியந்த கின்னஸ் பக்ரு. வைரல் வீடியோ.

குட்டி அர்ச்சனா சாரா :

மேலும், அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

-விளம்பரம்-
archana

ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி :

அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

இந்த வயதிலும் பிஸியாக இருக்கும் சாரா :

இருப்பினும் இவர்களுக்கு சமூக வலைதளத்தில் ஹேட்டர்ஸ்கள் குறைந்தபாடில்லை. இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் விஜய் டிவியில் ‘தாயில்லாமல் நான் இல்லை’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக வந்ததை பார்த்து ஹேட்டர்ஸ்கள் திட்டி தீர்த்தனர். தற்போது சாராவும் பல நிகழ்ச்சிகளில் அடிக்கடி தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். அதே போல படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மகளை நினைத்து கலங்கிய அர்ச்சனா :

இப்படி ஒரு நிலையில் வைத்து ஒன்றில் பங்கேற்ற சாரா நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. எனக்கு நண்பர்கள் என்றால் அது என் அம்மா தான் என்று கலங்கினார். தன் மகள் கலங்குவதை பார்த்த அர்ச்சனா 15 வயதில் மீடியாவில் இருப்பதால் நண்பர்களே கிடையாது என்பது மிகப் பெரிய கஷ்டம், அதில் நியாயமே கிடையாது. ஆனால், அந்த கஷ்டத்தை அவள் பட்டிருக்கிறார். அப்போது என்னிடம் வந்து நிறைய அழுதி இருக்கிறாள். அவளுக்கு நான் ஒரு நல்ல நண்பராக எப்போதும் இருப்பேன் என்று கலங்கியபடி பேசி இருக்கிறார்.

Advertisement