உங்க அம்மா ஒரு ஆங்கர் என்பதால் உன் ரத்தத்தில் இது இருக்கிறது – கேலி செய்த நெட்டிசன். அர்ச்சனா மகள் கொடுத்த பதிலடி.

0
6100
archana

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் பாருங்க : பெட்ரோல் விலை : அன்று தெறிக்க ட்வீட், இன்று தெறிக்க ஓட்டம் – நம்ம சிவகார்த்திகேயன் தான்.

- Advertisement -

மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்பதில் சந்தோசம் என்று கூறி இருந்தார் அர்ச்சனா. அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டதால் அவரை விட அவரது மகள் தான் சமூக வலைதளத்தில் பலவற்றை எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

ஆரி, மண்டியிட்டு சல்யூட் அடித்தார். இப்படி அவர் சொல்லியும் சமூக வலைதளத்தில் இருக்கும் நெகட்டிவிட்டி குறைந்தபாடில்லை. சமீபத்தில் சாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றின் கீழ் நெட்டிசன் ஒருவர், இது ரொம்பவும் ஓவர் ஆக்டிங், ஓவர் matured. உன் அம்மா ஆங்கர் என்பதால் இது உன் ரத்தத்தில் இருக்கிறது. ஆனால், இதை பாராட்ட முடியவில்லை. திறமைவாய்ந்த பல குழந்தைகளை இருக்கிறார்கள் அவர்களுக்கு நிரூபிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. யோசிங்க பேபி என்று பதிவிட, இதற்கு பதிலடி கொடுத்துள்ள சாரா அப்படி நீங்கள் நினைத்தால், நான் ஒன்றும் பண்ண முடியாது என்று அர்ச்சனா ஸ்டைலில் படு கூலாக பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement