விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன், இப்போ 15 நாட்களா இதான் நடக்கிறது – பேட்டியில் கண்ணீருடன் கூறிய அர்ச்சனா

0
591
Archana
- Advertisement -

பிக் பாஸ் அர்ச்சனா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 90ஸ் காலகட்டத்தில் சின்னத்திரையில் மிகப் பிரபலமான தொகுப்பாளராக திகழ்ந்தவர் அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவானார்கள் . இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

விஜே அர்ச்சனா குறித்த தகவல்:

திருமணத்திற்குப் பின்னர் இவர் பிரேக் எடுத்து கொண்டார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக மீண்டும் களமிறங்கினார். அதோடு அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா:

பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா பல கேலி, கிண்டல்களை சந்தித்திருந்தார். இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் இவர் வழக்கம் போல் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவர் தன்னுடைய மகளுடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் மீண்டும் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அர்ச்சனா அளித்த பேட்டி:

இந்த நிலையில் அர்ச்சனா தன் கணவரை விவாகரத்து செய்ய இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, அர்ச்சனா அவர்கள் வினித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்ச்சனாவின் கணவர் வினித் கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அர்ச்சனா தன் மகளுடன் சேர்ந்து பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இதுவரை நான் யாரிடமும் சொல்லவில்லை. இந்த பேட்டியில் முதன் முதலாக சொல்கிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கும் என்னுடைய கணவருக்கும் நிறைய பிரச்சனைகள் இருந்தது.

விவாகரத்து குறித்து அர்ச்சனா சொன்னது:

அதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். பின் 15 நாட்கள் கழித்து என்னுடைய மகள் சாரா எங்கள் இருவரையும் உட்கார வைத்து பேசினாள். நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ முடியுமா? என்று யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்குப் பின்னர் நாங்கள் எங்கள் தவறை உணர்ந்தோம். 20 வருடங்களுக்கு முன்பு எப்படி நாங்கள் சந்தித்து காதலித்தோமோ அதே போல் இந்த 15 நாட்களாக காதலித்து வாழ்ந்து வருகிறோம். கடைசி வரையும் என்னுடைய கணவர் எனக்கு வேண்டும். அவருடன் நிறைய சண்டைகள் போடுவேன். மாதத்திற்கு மாதம் விவாகரத்து கேட்பேன். இருந்தாலும் என் கணவரை விட்டு நான் பிரிய மாட்டேன் என்று கண்ணீர் மல்க அர்ச்சனா கூறி இருக்கிறார்.

Advertisement