-விளம்பரம்-
Home பிக் பாஸ்

மாயாவை வெற்றிபெற செய்ய பார்க்கிறதா பிக் பாஸ் குழு? அர்ச்சனாவிற்கு வாக்களிக்க முயன்றால் ஏற்படும் சிக்கல்.

0
524

பிக் பாஸ் அர்ச்சனாவிற்கு மட்டும் ஓட்டு பதிவாகவில்லை என்று ரசிகர்கள் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 99 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இன்னும் இந்த நிகழ்ச்சி ஒரு வாரம் தான் இருக்கிறது.

பிக் பாஸ் 7:

இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, விஜய் வர்மா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஆறு பேர் தான் இருக்கிறார்கள். இவர்கள் ஆறு பேரும் கடைசி வரை இருப்பார்களா? இந்த வாரமும் மிட் வீக் எவிக்ஷன் நடந்து யார் வெளியே செல்வார்கள்? என்று தெரியவில்லை.

View this post on Instagram
-விளம்பரம்-

A post shared by Biggboss Naveen 🦁 (@biggboss_naveen)

நிகழ்ச்சி குறித்த தகவல்:

ஆக மொத்தம், டைட்டிலை அடிக்கப் போவது யார் என்ற பல கேள்விகளுடனும், எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த வாரத்தின் இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மாண்டமாக பைனல் நிகழ்ச்சியை நடத்த பிக் பாஸ் குழு ஏற்பாடு செய்து இருக்கிறது. அதோடு இந்த வாரம் முழுவதும் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படுவார்கள்.

-விளம்பரம்-

வாக்குகள் பதிவு:

இதனால் போட்டியாளர்களின் ரசிகர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, அர்ச்சனாவிற்கு அதிக வாக்குகளும் ஆதரவும் பெருகி கொண்டிருக்கிறது. மேலும், ஹாட்ஸ்டார் தளம் மூலமாக தினமும் வாக்களிக்க முடியும் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறது. அதில் மிஸ்டு கால் மூலமாகவும் வாக்களிக்கலாம் என்று விஜய் டிவி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனி நம்பர் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் அர்ச்சனாவிற்கு மட்டும் மிஸ்டு கால் மூலம் வாக்களிக்க முடியவில்லை என்றும், அந்த நம்பரை டயல் செய்தால் ராங் நம்பர் வருகிறது என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

ரசிகர்கள் குற்றச்சாட்டு:

அது மட்டும் இல்லாமல் மணி உடைய நம்பரும் ரீச் ஆகவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, கியா ரே செட்டிங்கா, எல்லோருக்கும் மிஸ்டு கால் போகும்போது எப்படி இவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் மிஸ்டுகால் போகவில்லை? இது உங்களுடைய வேலையா? பிக் பாஸ் குழு செய்கின்ற சூழ்ச்சியா? என்றெல்லாம் விமர்சித்து குற்றம் சாட்டி வருகிறார்கள். இதற்கு பிக் பாஸ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news