அறுவை சிகிச்சைக்கு பின் வீல் சேரில் வீட்டிற்கு வந்த அர்ச்சனா – ஹேடர்ஸ்களை கூட சோகத்தில் ஆழ்த்திய வீடியோ.

0
2445
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று பல்வேறு விமர்சனங்கள் கூட எழுந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனாலேயே இவர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்கவில்லை. தனது யூடுயூப் சேனலில் மட்டும் வீடியோகளை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் தனது மகளுடன் இணைந்து பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ச்சனாவிற்கு எதிராக பல சோலோ யூடுயூபர்கள் விமர்சனத்தை முன் வைத்தனர்.

இதையும் பாருங்க : ஜோசியர் சொன்னது போல ‘s’ ல ஆரம்பிக்கும் பிரபலத்தை திருமணம் செய்துகொண்டாரா வனிதா ? அவரே பதிவிட்ட புகைப்படம்.

- Advertisement -

அதன் பின்னர் எப்படியோ இந்த விவகாரம் ஓய்ந்தது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மண்டையோட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் ஒரு வாரத்தில் வீடு திரும்பி விடுவேன் என்றும் கூறியிருந்தார்.

அவரது உடல் நலம் குறித்து அவரது மகள் சாரா அப்டேட் செய்து வந்தார். இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து அர்ச்சனா வீடு திரும்பியுள்ளார். அந்த வீடியோவில் அர்ச்சனாவை வீல் சேரில் கொண்டு வந்தனர். மேலும், அந்த வீடியோவில் பேசிய அர்ச்சனாவை கண்டு பலரும் நொந்து போனார்கள். காரணம் மிகவும் ஆக்டிவாக இருந்த அர்ச்சனா, குரல் மங்கி உடலும் மங்கி பார்ப்பதற்கு மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

-விளம்பரம்-
Advertisement