சிவகார்த்திகேயனே என்கிட்ட இதான் சொன்னாரு – பிறந்தநாளில் திட்டியவர்களுக்கு அர்ச்சனா பதிலடி.

0
19461
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று பல்வேறு விமர்சனங்கள் கூட எழுந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனாலேயே இவர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்கவில்லை. தனது யூடுயூப் சேனலில் மட்டும் வீடியோகளை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் தனது மகளுடன் இணைந்து பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ச்சனாவிற்கு எதிராக பல சோலோ யூடுயூபர்கள் விமர்சனத்தை முன் வைத்தனர்.

இதையும் பாருங்க : அட்டை படத்திற்கு உள்ளாடை தெரியும்படி படு கிளாமர் போஸ் – ஜகமே தந்திரம் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

அதன் பின்னர் எப்படியோ இந்த விவகாரம் ஓய்ந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று அர்ச்சனா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் தனது ரசிகர்களுடன் லைவில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பல ரசிகர்கள் அர்ச்சனாவிற்கு வாழ்த்து சொன்னாலும் ஒரு சிலரோ அர்ச்சனாவை மோசமாக திட்டினார்கள். இதற்கு லைவிலேயே சற்றும் கோபப்படாமல் பதில் அளித்தார் அர்ச்சனா.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் நான் சந்தோசமாக தான் இருப்பேன். என்னிடம் பேசியவர்கள் என்னிடம் சொன்னர்கள். அதிலும் சிவகார்திகேயன் என்னிடம் சொன்னார். அக்கா நீங்க நீங்களா இருக்கீங்க அத ஏன் மத்தவங்களுக்கு நிரூபிக்கணம்னு நினைக்கிறீங்க என்று சொன்னார். அது உண்மை தான் நான் நானாக இருக்கிறேன். நீங்கள் என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க. பிறந்தநாளில் கூட இப்படி எல்லாம் பேசுறீங்க நான் எதுவும் சொல்ல விரும்பல என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement