ப்பா, அர்ச்சனாவா இது ? எப்படி இருந்திருக்கார் பாருங்க. இப்போ புரியுதா இவங்க ஏன் 90ஸ் கிட்ஸ் பேவரைட்னு.

0
12710
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா ஒருவர். பொதுவாக பிக்பாஸ் செல்லும் முன்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்ற பல போட்டியாளர்கள் பிக்பாஸ் நுழைந்த பின்னர் பெயரை கெடுத்து வருகின்றனர். அந்த வகையில் அர்ச்சனாவும் ஒருவர்தான்.அர்ச்சனா உள்ளே நுழைந்த நாள் முதலே அனைத்து விஷயங்களுக்கும் மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் போட்டியாளரை இல்லை ஆங்கரா என்பது போல ஒரு சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் கமல் கூட அர்ச்சனாவிடம் அவர் செய்யும் நாட்டாமை வேலையை மறைமுகமாக கேலி செய்து இருந்தார். இருப்பினும் அர்ச்சனாவிற்கு ரியோ போன்றவர்களின் ஆதரவு இருந்து வருவதால் அவர் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்து கொண்டிருந்தார். சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா.அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. மேலும், இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். சமீபத்தில் இவரும் இவரது செல்ல மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமீபத்தில் கூட அர்ச்சனா தான் 20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கிறேன் அதனால் ஒரு பிரேக் வேண்டும் என்று தான் பிக் பாஸில் கலந்து கொண்டதாக கூறி இருந்தார்.

ஆம், தொகுப்பாளினியான அர்ச்சனா 20 ஆண்டுகளாக தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும், படங்கள் மற்றும் சீரியல்களில் கூட அர்ச்சனா நடித்திருக்கிறார். ஆனால், 90ஸ் கிட்ஸ் மத்தியில் இவர் பிரபலமானது என்னவோ காமெடி டைம் நிகழ்ச்சி மூலம் தான். இப்படி ஒரு நிலையில் அர்ச்சனாவின் பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement