தன்னை தனலட்சுமியுடன் ஒப்பிட்ட ரசிகர்கள் – கடுப்பாகி அர்ச்சனா என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
425
arcahana
- Advertisement -

‘எங்கள வாழ விடுங்க’ என்று அர்ச்சனா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இதுவரை இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. அதோடு நேற்று வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார். தற்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக டிக் டாக் தனலட்சுமி கலந்து கொண்டிருக்கிறார்.

தனலட்சுமி குறித்த சர்ச்சை:

நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இவரை குறித்த விமர்சனம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவும் ஜி பி முத்துவிற்கும் தனலட்சுமிக்கும் இடையே நடந்த விவாதம் குறித்து பலரும் தனலட்சுமியை விமர்சித்து பேசி இருந்தார்கள். சிலர் தனலட்சுமியை இந்த சீசன் ஜூலியா? வனிதாவா? அர்ச்சனாவா? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள். இதனை பார்த்து கடுப்பான அர்ச்சனா அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அர்ச்சனா பதிவிட்ட பதிவு:

அதில் அவர், எங்களை வாழ விடுங்கள். உங்களுடைய அசம்ப்ஷன் மற்றும் பதிவை கொஞ்சம் நிறுத்துங்கள். உங்களுடைய கமெண்டால் பலருடைய வாழ்க்கை நாசமாகிறது என்று கூறியிருக்கிறார். இப்படி அர்ச்சனா போட்ட பதிவிற்கு பலரும், இந்த மாதிரி ஆட்கள் சொல்வதை கண்டு கொள்ளாதீர்கள். உங்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்று ஆறுதலாக கூறி இருந்தார்கள். அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா குறித்த தகவல்:

90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் சன்,ஜீ தமிழ், விஜய் டிவி என பல சேனல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement