ஒரே ஒரு சீன் தான் 2 பேரும் வெளியே – அர்ச்சனாவின் ‘சாரிப்பா’வை கலாய்த்த ரசிகர்கள் – அர்ச்சனா கொடுத்த பதிலடி.

0
10102
- Advertisement -

அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கின் போது அர்ச்சனா ஒரு அணியிலும், நிஷா ஒரு அணியிலும் இருந்தனர். அப்போது அர்ச்சனாவிடம் இருந்து சோகம் அல்லது கோபம் என்று ஏதாவது உணர்வை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நிஷா எவ்வளவோ போராடினார்.ஒரு கட்டத்தில் மறைந்த அர்ச்சனாவின் தந்தை கேட்டு அர்ச்சனாவை சோகமடையச் செய்ய முயற்சித்தார் நிஷா. ஆனால், அப்போதும் அர்ச்சனா அசரவே இல்லை. இருப்பினும் அவர் முகம் சுகமாகனது என்று மற்றொரு ஹார்ட்டையும் பறித்தனர், ஆனால், இந்த டாஸ்க்கின் போது கடுப்பான அர்ச்சனாவை சமாதானப்படுத்த சென்ற பாலாஜி, இது ஒரு கேம் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறுகிறார், அப்போது அர்ச்சனா “என் தந்தை மரணம் விளையாட்டு அல்ல” என்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி பேசி இருந்தார் அர்ச்சனா.

-விளம்பரம்-

பின்னர் இந்த டாஸ்க்கிற்கு என் அப்பாவின் மரணம் தான் கிடைத்ததா நிஷா என்று அர்ச்சனா கூறியதால், நிஷா அவரை சமாதானம் செய்ய பார்த்தபோது அவரும் கொஞ்சம் ஆவேசமாக பேசினார். ஆனால், அப்போதும் அர்ச்சனா சமாதானம் ஆகவில்லை. பின்னர் நிஷா எப்படியோ அழுது புலம்பி எப்படியோ அர்ச்சனாவை சமாதானம் செய்தார். ஒரு கட்டத்தில் மழை பெய்ய அதை பார்த்த அர்ச்சனா, இந்த மழை தான் எங்க அப்பா என்று கூற, அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா, அப்பா என்று நிஷா ஒரு ஆஸ்கார் பெர்மார்மன்ஸையே செய்தார்.

இதையும் பாருங்க : ட்ரெஸ்ஸே இல்லாம இருக்கும் சாமிய பாத்தா ஏன் அது தோன்றது இல்ல – சர்ச்சையை கிளப்பிய கமலின் பேச்சு – வைரல் வீடியோ.

- Advertisement -

அர்ச்சனா மற்றும் நிஷாவின் இந்த செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். மேலும், இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவரது ஓவரான அன்பு ஸ்டரட்ர்ஜி தான் என்று பலரும் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் இதே விஷயத்தை குறிப்பிட்டு பலரும் அர்ச்சனாவை கேலி செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை. இருப்பினும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷை சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு கீழ ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவை கலாய்த்து வந்தனர்.

-விளம்பரம்-

அதில் ரசிகர் ஒருவர், அர்ச்சனா மற்றும் நிஷா, மழையை பார்த்து அழுத மீம் ஒன்றை பகிர்ந்து, ஒரே ஒரு சீன் தான் 2 பேரும் வெளியே என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அர்ச்சனா, என் அப்பாவின் மரணம் உங்களுக்கு சீன், சூப்பர் டா நீங்க. என் அப்பா உன்னை வாழ்த்தட்டும் என்று பதில் அளித்துள்ளார். அதே போல, அன்பு கேங் ரீ யூனியன் , சுத்த வேஸ்ட். உங்கள் மீது நல்ல எண்ணம் வைத்திருந்தேன், ஆனால், நிகழ்ச்சியில் நீங்கள் செய்ததை பார்த்தவிட்டு உங்கள் மீது இருந்த மரியாதையே போய்விட்டது என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அர்ச்சனா, நன்றி, என்னை வெறும் 67 மணி நேரத்தில் எடை போட்டதற்கு, உங்களில் கருத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Advertisement