ட்ரெஸ்ஸே இல்லாம இருக்கும் சாமிய பாத்தா ஏன் அது தோன்றது இல்ல – சர்ச்சையை கிளப்பிய கமலின் பேச்சு – வைரல் வீடியோ.

0
723
- Advertisement -

கற்பழிப்பில் ஈடுபடுவோர்களுடன் கடவுளை ஒப்பிட்டு பேசிய கமலின் பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர். சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டவில்லை. ஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார். இதற்காக மதுரை, தேனி, விருதுநகர்,விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் பிரச்சாரத்திலும் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்திலும் பங்குபெற்று வந்தார் கமல். பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் நேற்று திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், செல்லும் இடமெல்லாம் தனக்கு மக்களின் ஆதரவு இருப்பாதகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

மேலும், பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கடந்த புதன்கிழமை சென்னையில் மக்கள் நீதி மையத்தின் மகளிர் அணியான மையம் மாதர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல் கலந்து கொண்டு இருந்தார் இந்த நிகழ்ச்சியில் நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் குறித்து பேசி இருந்தார் கமல்.

பெண் வாக்காளர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் எனவே அவர்கள் தான் தமிழ்நாட்டின் விதியை மாற்ற முடியும். பெண்கள், அரசியல் பற்றி நினைத்தாலே அவர்கள் முதலில் நினைப்பது கட்சி நிறம் கொண்ட வேஷ்டி. சாராயம். பிரியாணி மற்றும் அவதூறான பேச்சுக்கள் தான். மக்கள் நீதி மையம் தான் இதனை உடைக்கும் ஒரு முதல் கட்சியாக இருக்கும். மேலும், பொது இடங்களிலும் வேலை செய்யும் இடங்களிலும் பெண்களுக்கு தேவையான கழிவறைகளை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை.

-விளம்பரம்-

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்யும் நபர்களுக்கு கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட வேண்டும்.பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் ஆணாதிக்கம் கொண்ட சில ஆண்கள் தான் கற்பழிப்பிற்கு என்ன காரணம் என்று கேட்டால் பெண்கள் அப்படி துணி உடுத்துவதால் தான் அவர்களின் மனம் கெட்டு விடுகிறது என்கிறார்கள். எதை செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், இருந்தும் அதை மீறுகிறார்கள், அதனால்தான் அதன் பெயரை வன்புணர்ச்சி என்கிறார்கள் அது ஒரு வன்முறை. சாமி கூடத்தான் குறைவாக ஆடை உடுத்தி இருக்கிறது. சில சாமிகள் ஆடை உடுத்துவது கிடையாது. அதே என்னுடைய அக்கா தங்கையை பார்க்கும் போது எப்படி தோன்றுகிறது என்று பேசியிருந்தார்.

Advertisement