விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவும் ஒருவர். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதே போல இவர் முதன் முதலில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார்
மேலும், தமிழில் கூட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இதனால் சமூக வலைதளத்தில் அடிக்கடி இவரை விமர்சித்து வருகின்றனர். இதனாலேயே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எந்த பேட்டியிலும் பங்கேற்கவில்லை.
இதையும் பாருங்க : உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ஜென்டில் மேன் பட நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி.
ஆனால், இஸ்னாட்க்ராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதே போல இவர் வாவ் லைப் என்ற யூடுடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த யூடுயூ சேனலில் தனது தங்கை மற்றும் தனது மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார் அர்ச்சனா. அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது வீட்டு பாத்ரூம் டூர் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியோ 2மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடுயூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வந்தது. இருப்பினும் இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் கேலி செய்து கமன்ட் செய்தனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அர்ச்சனா, பாத் ரூம் டூர் செய்ததற்கு யாரெல்லாம் என்னை கேலி செய்தீர்களோ, நாங்கள் தான் ட்ரெண்டிங்கில் நம்பர் 1, மில்லயன் வியூஸ் பெற்றுட்டோம். உங்கள் அன்பிற்கு நன்றி. என்று பதிவிட்டு #podadai என்ற ஹேஷ் டேக்கையும் போட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.