அர்ச்சனா தம் அடிக்கிறது பத்தி கமல் சார்கிட்ட கண்டிப்பா சொல்வேன் – விஷ்ணு இப்படி சொல்ல காரணம் என்ன தெரியுமா?

0
445
Vishnu
- Advertisement -

இந்த சீசனில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளர்கள் விஷ்ணுவும் ஒருவர்தான் பிக் பாஸ் ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்து இவர் அடிக்கடி கூச்சலிட்டுக் கொண்டும் மற்ற போட்டியாளிடம் சண்டை எடுத்துக் கொண்டும் தான் இருந்து வருகிறார் வாரத்திற்கு யாராவது ஒருவரை டார்கெட் செய்து அவர்களிடம் சண்டையிட்டு வருவதே விஷ்ணுவின் வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் இந்த வாரம் முழுக்க அர்ச்சனாய் உடன் தான் விஷ்ணு அடிக்கடி சண்டை இட்டு கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த வாரத்திற்கு கேப்டன் தேர்வு நடைபெற்ற போதில் இருந்து விஷ்ணு உடைய செயல்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் நிக்சன் கேப்டன் ஆனதை அடுத்து விஷ்ணுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் இவர் பல இடங்களில் தன்னுடைய கோபத்தை காண்பித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் காலை ஆக்டிவிட்டி நடந்திருக்கிறது. அதில் போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது விஷ்ணு, வீட்டில் அஞ்சலி பாப்பா மாதிரி திரிகிறார்கள் என்று அர்ச்சனாவே டார்கெட் செய்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

விஷ்ணு செய்த செயல்:

அதற்கு பின் டாஸ்க் முடிந்து கிச்சனுக்கு வந்த ஸ்மால் பாஸ் வீட்டார் காலை உணவை தயாரிக்கும் வேலையில் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது காலையில் தன்னை தாக்கி பேசியது குறித்து அர்ச்சனா விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். வழக்கம்போல் விஷ்ணு கோபப்பட்டு கத்துகிறார். பதிலுக்கு அர்ச்சனாவும் விடாமல் பேசி இருக்கிறார். ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடு அமைதியாக இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஷ்ணு, கையை வீசி பளார் பளார் அடிப்பேன் என்று கூறினார்.

கோபத்தில் அர்ச்சனா:

அதைக் கேட்டு ஆவேசம் அடைந்த அர்ச்சனா, அடிங்க அடிங்க என்று விஷ்ணு அருகில் சென்று இருக்கிறார். இதனால் வீடு கலவரத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் பிக் பாஸ் வீட்டில் இருந்த விசித்ரா, கிட்சன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அர்ச்சனாவை பற்றி மாயா, பூர்ணிமாவிடம் குறை கூறி இருக்கிறார். அதில் அவர், அர்ச்சனாவுக்கு வேலையே தெரியாது. அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் தான் ஏற்றுக் கொள்ள கோபத்தில் கத்தினார் அர்ச்சனா.

-விளம்பரம்-

அர்ச்சனாவின் புகைபிடிக்கும் பழக்கம் :

இதற்கிடையில் அந்த பக்கம் அர்ச்சனா வருகிறார். அப்போது அர்ச்சனா நீ செய்தது தவறு என்று விசித்திரா கூட கூறி இருந்தார். நேற்றய நிகழ்ச்சியில் கூட அர்ச்சனா மற்றும் விஷ்ணுவிற்கு பெரும் வாக்குவாதம் சென்றது. இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா புகைப்பிடிப்பதால் தன்னுடைய ஆரோக்யம் பாதிக்கப்படுகிறது என்று கமல் சாரிடம் செவ்ல்லப்போவதாக விஷ்ணு கூறி இருக்கிறார்.

விஷ்ணு சொல்ல காரணம் :

அது எப்படி அர்ச்சனா புகைப்படத்தால் விஷ்ணுவின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்ற கேள்வியும் உங்களுக்கு எழலாம் நேற்றைய டாஸ்க் அர்ச்சனா பூர்ணிமா விஷ்ணு ஆகிய மூவரும் ஒரே கயிரில் கட்டி வைக்கப்பட்டார்கள் அர்ச்சனாவிற்கு அடிக்கடி புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது அந்த வகையில் விஷ்ணு மற்றும் பூர்ணிமா உடன் கட்டப்பட்டிருக்கும் அர்ச்சனா ஸ்மோக்கிங் ரூமிற்கு சென்று தம் அடித்திருக்கிறார் இதனால்தான் விஷ்ணு அர்ச்சனாவின் புகைபிடிக்கும் பழக்கத்தால் தன்னுடைய ஆரோக்கியம் கெடுகிறது என்று கூறி இருக்கிறார்

Advertisement