ஜீ தமிழ் சேனல்ல ஆறு வருஷம் ராணி மாதிரி தொகுப்பாளரா வேலை செஞ்சேன். ஆனா – அர்ச்சனா ஓபன் டால்க்.

0
171576
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11 வாரங்களை கடந்து 12 வது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ்,அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வார இரண்டு வாரத்திற்கு முன்னர் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா வெளியேறியபோது அந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர் . எனவே,அந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக தான் இருந்தார்.

- Advertisement -

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவிற்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து கேக் வெட்டி கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். ஆனால், சமூக வலைதளத்தில் இவருக்கு எதிர்ப்பை பார்த்து இவர் ட்விட்டரில் இருந்தே வெளியேறினார். அதே போல அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். ஜீ தமிழ் சேனலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டதாக கூட கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அர்ச்சனா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், ஜீ தமிழ் சேனல்ல இருந்து நான் வெளியேறிட்டதாவும், பெரிய தொகை வாங்கிட்டுத்தான் `பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள் போனதாகவும் பேச்சுகள் எழுந்திருக்கு. இந்த இரண்டுமே உண்மையில்ல. ஜீ தமிழ் சேனல்ல ஆறு வருஷம் ராணி மாதிரி தொகுப்பாளரா வேலை செஞ்சேன். ஆனா, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலை செஞ்சேனே தவிர, அந்த சேனலின் ஊழியரா நான் செயல்படல. என்னோட தனிப்பட்ட வளர்ச்சிக்காக அந்த சேனல்ல இருந்து வெளியேறிய நிலையிலதான், எனக்கு `பிக்பாஸ்’ வாய்ப்பு வந்தது . ரெண்டு வெவ்வேறு விஷயம் என்று கூறியுள்ளார் அர்ச்சனா.

-விளம்பரம்-
Advertisement