விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவும் ஒருவர். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதே போல இவர் முதன் முதலில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார்.
மேலும், அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.இளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.’ச ரி க ம நிகழ்ச்சியில் அர்ச்சனா தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த என்டர்டைனராகவும் இருந்து வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாடும் பாடகர்களுக்கு நிகராக அர்ச்சனாவின் காமெடியான ஆங்கரிங் ஸ்டைலுக்கும் பல்வேறு ரசிகர்கள் இருந்தார்கள் என்பது தான் உண்மை. என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். அதே போல இவர் woow life என்ற யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த சேனலை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த யூடுயூ சேனலில் தனது தங்கை மற்றும் தனது மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார் அர்ச்சனா. அந்த வகையில் இவர் இந்த யூடுயூப் சேனலில் bathroom tour வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ கடும் விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனால் இவரை பலரும் troll செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அர்ச்சனா கல்லூரி விழா ஒன்றிற்கு சென்று இருந்தார்.
#VjArchana Replied To Student Who Troll Her Bathroom Tour pic.twitter.com/oTus0hPcww
— chettyrajubhai (@chettyrajubhai) February 10, 2023
அப்போது பேசிய அவர் ‘Wow life nu sonnathum டக்குனு அங்க ஒரு தம்பி ‘ டேய் பாத் ரூம் Tour டா ‘ அப்படினு சொன்னாரு. பாத்ரூம் காண்பிப்பது தவறு கிடையாது. உன் பாத்ரூம் காட்டுகிற நிலையில் இருந்தால் கண்டிப்பாக காட்டலாம் என்று கற்றுக் கொடுத்தது எனக்கு இந்த கல்லூரி தான். நான் பாத்ரூம் காண்பித்ததை பற்றி அசிங்கப்பட்டது கிடையாது. நான் எப்படி மலம் அழிக்கிறேன் என்பதை காண்பிக்கவில்லை. நான் பாத்ரூமில் எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதைத்தான் காண்பித்தேன்.
ஏனென்றால் உங்களின் படுக்கை அறையில் தான் பாத்ரூமில் இருக்கிறது. எனவே, அதை எப்படி சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்பதைத்தான் நான் சொன்னேன். நான் விரும்புவதை செய்யும் தைரியத்தை எனக்கு கொடுத்தது இந்த கல்லூரி தான். எனக்கு வரும் கேலி கிண்டல்கள், அசிங்கமான பேச்சுகளை எல்லாம் தாண்டி தற்போது ஒரு சிங்கப்பின் போல நின்று, என்ன வேணா நீங்க கதறுங்கடா நான் என்னுடைய வேலையை செய்கிறேன் என்ற கெத்தை கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று கூறியுள்ளார்.