சுரேஷ் சார்லாம் கலாநிதி மாறன் கிட்டயே அப்படி இருந்தவர், அவரை நீ கலாய்கிறியா. கடுப்பான பிக் பாஸ் நடிகையின் கணவர்.

0
3358
suresh
- Advertisement -

இப்படி ஒரு சமயத்தில் vj அர்ச்சனாவை பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக அனுப்பியுள்ளார் பிக் பாஸ். அர்ச்சனா, பிக் பாஸின் முதல் நாளே கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததால் பிக் பாஸில் கலந்துகொள்ள சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது எப்படியோ அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார்.அர்ச்சனாவை பற்றி சொல்லவா வேண்டும். இவரை பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் குஷியில் ஆழ்ந்தனர்.

-விளம்பரம்-

அர்ச்சனா பபிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனேயே போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே சென்றதும் அர்ச்சனாவிற்கு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் போட்டியாளர்கள் அனைவர்க்கும் பட்டப்பெயரை கொடுத்தார் அர்ச்சனா. அதே போல அர்ச்சனா உள்ளே போனதும் சுரேஷ் சக்ரவர்த்தியை தான் அதிகம் கலாய்த்து இருந்தார். அதுவும் இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் ஆங்கர் ஆகவில்லை என்று கேட்டிருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவர் சிவகுமார் ட்வீட் போட்டுள்ளார். அதில் ” திரு.கலநிதி மாரனுடன் நேராக அணுகும் சிலரில் திரு.சுரேஷ்ஷும் ஒருவர். அவர்களின் ஆரம்ப நாட்களில் சன்நெட்வொர்க்கின் தலைமை மேற்பார்வையாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். பெப்சி உங்கள் சாய்ஸ் இயக்குனரும் அவர் தான். ஆனால், காமெடி டைம் நிகழ்ச்சியோடு உங்கள் பெயர் கூட மறந்து விட்டது என்று அர்ச்சனாவை சாடியுள்ளார்.

அவ்வளவு ஏன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் பிக் பாஸ் குறித்து போட்ட ட்வீட் ஒன்றை லைக் செய்துள்ளார். அந்த டீவீட்டில் ‘அர்ச்சனா நீங்கள் பிக்பாஸில் கலந்துகொள்வது உண்மை என்றால், உங்கள் கேமை தனியாக விளையாடுங்கள். மேலும் அந்த முரடன் எப்படிப்பட்டவர் என்பதை உணர வையுங்கள் . அதேபோல அந்ததந்திர ராணியை, தான் எப்படி ஒரு தந்திரவாதி என்பதை உணர வையுங்கள். அவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது அந்த முரடன், சுரேஷ் சக்ரவர்தியாக இருக்குமோ என்று எண்ணம் தோன்றுகிறது.

-விளம்பரம்-
Advertisement