நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கரை நாம் அனைவரும் அறிவோம். பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி.
ஆர்த்தி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இவரது குண்டான தோற்றம் தான். ஆரம்பத்தில் ஆர்த்தி சற்று அளவான உடலில் தான் இருந்தார். ஆனால், உடல் எடை கூறைக்கின்றேன் என்று இவர் எடுத்த சில முயற்சிகளால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது.
இருப்பினும் தனது உடல் எடையை பற்றி கவலைபடாமல் தனது உடல் எடையை யாரேனும் கிண்டல் செய்தாலும் அதனை ஆர்த்தி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. இந்நிலையில் நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில் ஆன்மீகவாதி போன்ற உடையணிந்து ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். இந்த கெட்டப்பை கண்டு ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். இதனை கண்ட அனைவரும் சைனா பொம்பை போன்றே இருக்கிரீங்க என்று கமன்ட் அடித்து வருகின்றனர்.