ஆயிஷாவுக்கு எதிராக சதி செய்யப்படுகிறதா ? இந்த வாரம் அவருக்கு நடந்த விஷயங்களை சொல்லி புலம்பும் Supporters.

0
552
- Advertisement -

ஆயிஷாவை வெளியேற்றுவதற்கு விஜய் டிவியும், பிக் பாஸ்ஸும் சதி செய்து வருகிறது என்று ரசிகர்கள் கூறும் குற்றச்சாட்டு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 62 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சியமான முகமாக கலந்து கொண்டிருப்பவர் நடிகை ஆயிஷா. இவர் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் தான் நடித்துக் கொண்டிருந்தார். பின் சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்.

- Advertisement -

ஆயிஷா நடித்த சீரியல்கள்:

அதன் பின்பு மாயா என்ற சீரியலில் ஆயிஷா நடித்தார் . அந்த தொடர் மூலம் ஆயிஷா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். பின் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் ஆயிஷா நடித்து இருந்தார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் சத்யா சீரியல் முடிந்தது. தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்றுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா:

ஆரம்பத்தில் இருந்தே ஆயிஷா போட்டியாளர்களிடம் மச்சி, மாமா,வாடா என்று கூப்பிட்டு ஓவராக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் பலமுறை கமலஹாசனிடம் ஆயிஷா பல்பு வாங்கி இருக்கிறார். இருந்தாலும், ஆயிஷா தன் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், இந்த வாரம் நடந்த நாமினேஷனில் ஆயிஷா உடைய பெயர் இடம் பெற்று இருக்கிறது. வாக்குகளின் அடிப்படையில் கடைசி இரண்டு இடங்களில் ஆயிஷா இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் இந்த வாரம் கமலஹாசன் அவர்கள் டபுள் எவிக்ஷன் என்று கூறியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஆயிஷா இந்த வாரம் வெளியேறிடுவார் என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஆயிஷாவுக்கு எதிராக சதி செய்த பிக் பாஸ்:

ஆனால், இந்த வாரம் நடந்து வரும் மாறுவேட போட்டியில் ஆயிஷாவுக்கு சிம்புவின் கெட்டப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிம்புவாகவே இவர் முடிந்த வரைக்கும் நடித்திருக்கிறார். இவர் சிம்பு மாதிரி நடிப்பதற்காக போட்ட முயற்சிக்காக பலரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், எபிசோட்டில் இவர் செய்த முயற்சியை காட்டவே இல்லை. மூன்று நிமிடங்கள் மட்டுமே இவருடைய பர்ஃபார்மன்ஸ் காட்டப்படுகிறது. ஆனால், 24 மணி நேரத்தில் இவருடைய பர்ஃபார்மன்ஸ் பார்த்து ரசிகர்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். எபிசொட்டில் இவருடைய காட்சி காட்டப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆயிஷாவுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்:

அது மட்டும் இல்லாமல் இந்த வாரம் ஆயிஷாவே வெளியேற்றுவதற்காக தான் இப்படி எல்லாம் பிளான் செய்கிறார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், ரக்ஷிதாவிற்கு மட்டும் ஒரு எளிமையான கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டு ஆயிஷாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருப்பது ஓரவஞ்சனை. ஆயிஷாவிற்கான சரியான ஆடை இல்லை. பெர்ஃபார்மன்ஸ் கூட நிகழ்ச்சியில் அதிகமாக காட்டவில்லை. இதன் மூலம் ஆயிஷாவை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற விஜய் டிவி முடிவு செய்து இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றெல்லாம் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement