Propose தினத்தில் தனது காதலருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ஆயிஷா.

0
1109
ayesha
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 பிரபலமான ஆயிஷா தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். பின்னர் இந்த சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்.

-விளம்பரம்-

அதன் பின்பு இவர் மாயா என்ற சீரியலில் நடித்தார் . அந்த தொடர் மூலம் ஆயிஷா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். பின் ஜீ தமிழ் தொலைக்கஸியில் ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் ஆயிஷா நடித்து இருந்தார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா:

இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்றிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஆயிஷா போட்டியாளர்களிடம் மச்சி, மாமா,வாடா என்று ஓவராக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் அசலுக்கும், ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதோடு பிக் பாஸ் ஓவியாவை போல் முயற்சி செய்கிறேன் என்று ஏதாவது ஒன்றை ஆயிஷா செய்து ரசிகர்கள் மத்தியில் திட்டு வாங்கிக் கொண்டு வருகிறார்.

வெளியேறிய ஆயிஷா :

இப்படிப்பட்ட நிலையில் தான் ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து குறைவான வாக்குகள் வெளியேறினார்.பிகே பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஆயிஷா பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துவருகிறார். இந்த நிலையில் தான் ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் தன்னுடைய காதலனின் முகத்தை மறைத்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

ஆயிஷாவின் காதலர் :

இதன் மூலம் ஆயிஷா தன்னுடைய காதலன் யார் என்பதை விரைவில் சொல்ல இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது.இதற்கு முன்னரே ஆயிஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வராத நிலையில் நெற்றியில் குங்குமம் வைத்து புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அப்போதே இவருடைய ரசிகர்கள் திருமணம் குறித்து கேட்டனர். மேலும் ஒரு வேலை ஆயிஷா பிக் பாஸ் வீட்டிற்குள் ஆயிஷா ப்ரீஸ் டாஸ்க் வரை இருந்திருந்தால் அவருடைய காதலன் வந்திருக்க வாய்ப்பு இருந்த்தாகவும் கூறி வந்தனர்.

ஆயிஷா வெளியிட்ட புகைப்படம் :

இப்படி ஒரு நிலையில் propose தினத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய காதலை உறுதி செய்து இருக்கிறார். எனவே, காதலர் தினத்தில் ஆயிஷா தனது காதலரின் முகத்தை காட்டுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement