பிக் பாஸ் பிரபலம் ஆயிஷா தமிழில் ஹீரோயினியாக களமிறங்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஆயிஷ. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். அதன் பின்பு இவர் மாயா என்ற சீரியலில் நடித்தார். அந்த தொடர் மூலம் இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து இருந்தது.

அதன் பின்பு தான் ஆயிஷா அவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் நடித்து இருந்தார். இந்த சீரியல் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த தொடர் காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிந்துரா பிந்து’ என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் தான் சத்யா சீரியல். இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி இருந்தது.
ஆயிஷா குறித்த தகவல்:
மேலும், ஆயிஷா தமிழ் மொழி சீரியலில் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் நடித்து இருக்கிறார். நடிகை ஆயிஷாவின் துணிச்சலான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. இதை எடுத்து ஆயிஷா தமிழ் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 63 நாட்கள் இருந்தார். இதை அடுத்து தற்போது இவர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஓடிடியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் உப்பு புளி காரம் என்ற சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆயிஷா படம்:
இந்த தொடர் ரசிகர் மனதில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் டாக்டர் பென்னட் என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தான் ஆயிஷா நடிக்கிறார்.
படத்தின் கதை:
காதலர்கள் பிரிந்த நிலையில் இருவரும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். எதிர்பாரா விதமாக மீண்டும் அவர்கள் சந்திக்கும் சூழ்நிலை வருகிறது. அப்போது இந்த சந்திப்பின் போது அறை ஒன்றில் இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த அறையின் கதவு திறக்கப்பட்டவுடன் வெளியில் அந்த இருவரின் ஜோடிகள், பேமிலி, நண்பர்கள் எல்லோருமே இருக்கிறார்கள். இந்த சூழலில் முன்னாள் காதலர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை ரொமான்டிக் காமெடி தில்லர் பாணியில் இயக்குனர் உருவாக்கியிருக்கிறார்.

இயக்குனர் பேட்டி:
இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜாபர் என்பவர் தான் இயக்குகிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் உடைய சகோதரர் ரமேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் புகழ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை. மேலும், இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் ஜாபர், நானும் நடிகர் கணேசும் நண்பர்கள். அவரிடம் சில கதைகள் சொன்னேன். அவரும் சினிமாவில் அறிமுகமாவதற்கு காமெடி கதை தான் சரியாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்தார். இந்த மாத இறுதியில் படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. எட்டு ஆண்டுகளாக இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன் என்று பல விஷயங்களை கூறியிருக்கிறார்






