இனி அவருடன் நடிக்கவே மாட்டேன்.! நெருங்கிய நண்பரையே இப்படி சொல்லிட்டாரே ஐஸ்வர்யா.!

0
3713
ayswarya-yashika-mahat

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நோக்கி சென்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர், தமிழில் ஒரு சில படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார். ஆனால்,இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழக மக்களிடையே அதிக அளவு பேசப்பட்டு வருகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருடைய லைஃப் ஸ்டைலே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக உள்ளார்.சமீபத்தில் ஐஸ்வர்யா அலைபேசி உரையாடலில் கூறியது, பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தான் என்னுடைய எனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. ரொம்ப சந்தோசமாக இருக்கு, அது மட்டும் இல்லைங்க படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன்.ஏன்னா ? நல்ல கதைகளில் நடிக்கணும், அதைவிட முக்கியம் தமிழக மக்களிடையே நல்ல பெயரையும் வாங்கணும் என்ற நோக்கில்தான்.

ayswarya

இப்ப நல்ல கதையாக இருந்தால் படம் வெளியே வருவது ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் போட்ட உழைப்பு வீணாகாமலும், தியேட்டர்களில் போடும் வகையில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். இப்ப நான் 3,4 படங்களில் நடித்து வருகிறேன்.நெடுஞ்சாலை ஹீரோ ஆரிவுடன் நடிக்கும் படம் ஆகும்.இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் கூட சொல்லலாம்.ஏன்னா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிஞ்ச உடனே எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு அந்த படம்தான். இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஒரு மெச்சூர் பொண். இந்த படத்தை ராஜ மித்திரன் இயக்குகிறார். இந்த படம் எப்படினா கமர்சியல் படமாக இல்லாமல் கொஞ்சம் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இருக்கும். இந்த படத்தில் நாசர் சார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அவர் இந்த படத்தில் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற கர்வத்தை எந்த ஒரு இடத்திலும் காட்டாமல் அழகாக நடித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லைங்க சூப்பரா பண்ணறன்னு எனக்கு என்கரேஜ் செய்வார். என்னுடைய பர்சனல் லைப்ல ஏற்பட்ட பிரச்சனைக்கு எனக்கு ஆதரவாக இருந்தது என் நண்பர்களும், அவர்களுடைய குடும்பங்களும் தான் இந்த தருணத்தில் நான் உங்களுக்கு நன்றி சொல்லணும் நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிடும். இந்த படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கும். அது மட்டுமில்லீங்க, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே மகத் நெருங்கிய நண்பர்கள். பிக்பாஸ் வீட்டு வெளியே வந்த பின்னால் மகத்தோட மொத்த குடும்பமும் நல்ல பழக்கம் ஆயிட்டாங்க. அவங்க குடும்பத்துல ஒருத்தி மாதிரி என்னை பாத்துக்குறாங்க. எனக்கு ஒரு பிரச்சனைனா ! அவங்க என் கூட துணையாவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள். இந்தளவுக்கு தைரியமா சினிமாத்துறையில் இருப்பதற்கு காரணம் மகத் தாங்க. படத்துல ரொமான்டிக் காட்சிகளில் நடிக்க எனக்கு ரொம்ப தயக்கமாவும், கஷ்டமாக இருக்கும். ஆனால், நடிப்பு வந்த அதெல்லாம் பார்க்க கூடாது என்று என்னை எங்கரேஜ் பண்றது மொட்டை ராஜேந்திரன் சார், மகத் இவங்க ரெண்டு பேரும் தான்.

-விளம்பரம்-

இவங்களோட யோகிபாபு அண்ணாவும் சொல்லலாம். இவங்க மூணு பேரும் ஒண்ணா இருந்தா எப்படி இருக்கும் தெரியுங்களா. மேலும், வரலட்சுமி சரத்குமார், நான், ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா நாலு பேர் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறோம். இந்த படத்திற்கான சூட்டிங் பாதி முடிஞ்சிடுச்சு. இந்த படத்தின் மூலமாக எனக்கு ஒரு நல்ல தோழிகள் கிடைச்சிட்டாங்க கூட சொல்லலாம். அது வேற யாரும் இல்லைங்க வரலட்சுமி தான். முதன் முதல்ல நான் ஆக்சன் சீன்ல நடிக்கிறது இந்த படத்தில்தான். இந்த படத்தின் மூலம் தான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இந்த படம் ஒரு ரொம்ப வித்யாசமான கதை. இந்த உலகத்தில் அதிகமாக அடிமையாகி இருக்கிறது மொபைல் கேம் தாங்க. எனக்கு பப்ஜி விளையாட்டு ரொம்ப புடிக்கும். இந்த படத்துல எனக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கேன். இப்ப தான் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

மேலும், ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். இந்த படத்துக்கான தகவல் கூடிய சீக்கிரத்துல அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.யாசிக்க ஆனந்த் சூப்பரான படங்கள்ல நடிச்சி இருக்காங்க. அவங்க நடித்த ‘ஜாம்பி’ படம் வேற லெவல்ல இருக்கு என்று கூட சொல்லலாம். மேலும் நாங்க ரெண்டு பேரும் நல்ல கதை வந்தா சேர்ந்து நடிக்கலாம்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா, இப்போ வேணாம்னு எங்களுக்கு தோணுது. ஏன்னா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிட்டோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கும் போது இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க வேண்டும். இந்த போட்டி எங்க நட்பை பாதிக்குமோ? என்ற காரணத்தினால் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்துள்ளோம் என்று கூறினார்.

Advertisement