‘இவங்கெல்லாம் பிக் பாஸ்ல என்ன பண்ணாங்க’ ஷிவானி உட்பட சீசன் 4 போட்டியாளர்களை கழுவி ஊற்றிய அசீம்.

0
594
azeem
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 65 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 10 போட்டியாளர்கள் போக தற்போது 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல முகங்கள் இருக்கின்றனர் அதில் அஸீமும் ஒருவர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர். ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவர் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட போட்டியாளர்கள் குறித்து பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பேசி இருக்கும் அசீம் ‘ஆஜீத் எல்லாம் அந்த சீசனில் ஒன்றுமே செய்யவில்லை. ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி, ரியோ போன்ற அனைவரும் பெரிதாக ஒன்றும் பண்ணவில்லை. நிஷா ஏன் வந்தார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை பார்க்கிறவர்களுக்கும் புரியவில்லை’ என்று பேசி இருக்கிறது.

அசீம் சொன்ன இந்த விஷயத்தை பலர் விமர்சித்து வந்தாலும், அவர் சொலவதில் நியாயம் இருக்கிறது என்று பெரும்பாலான நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் சேஷன் 4ல் ஷிவானி பெரிதாக எதுவும் விளையாடவில்லை ஆனால், அவர் இறுதி வாரம் வரை தொடர்ந்தார். ஆனால், அவரை விட சிறப்பாக விளையாடிய சனம் செட்டி எல்லாம் ஷிவானிக்கு முன்பே வெளியேற்றப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதே போல தான் இந்த சீசனில் தனது பங்களிப்பை அதிகம் கொடுத்த வந்த ஆயிஷாவின் வெளியேற்றமும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அவரை விட ரசிகர்களின் அதிக வெறுப்பை சம்பாதித்த ADK மற்றும் ஜனனி எல்லாம் உள்ளே இருக்கும் போது ஆயிஷா வெளியேற்றம் ரசிகர்களை பெருத்து ஏமாற்றத்திற்கு தள்ளியது. இதனால் ஆயிஷாவின் ரசிகர்கள் விஜய் டிவியை விமர்சித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல அசீம் கடந்த சீசனை விட்டுவிட்டு அதற்கு முந்தய சீசன் குறித்து பேசி இருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானிகும் அஸீமுக்கு பகல் நிலவு தொடரில் நடித்த போது காதல் ஏற்பட்டது என்றும் அதனால் தான் அசீம் தனது மனைவியை பிரிந்தார் என்றும் கூட கிசுகிசுக்கள் வெளியானது. அதனால் தான் ஷிவானி கலந்துகொண்ட சீசனில் அசீம் வைல்டு கார்ட் போட்டியாளராக உள்ளே செல்ல இருந்த போது ஷிவானியின் அம்மா சேனல் தரப்பில் வாக்குவாதம் செய்து அசீம் என்ட்ரியை தடுத்தார் என்றும் கூட அப்போது செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement