என் எதிரியாய் இருக்க உனக்கொரு தகுதி இல்லை – adkவிற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த அசீம். வைரலாகும் பதிவு.

0
665
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அஸீமின் வெற்றி சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. மற்றவர்களை இழிவாக பேசி விளையாட்டை தவறான முறையில் விளையாடினால் பிக் பாஸில் வெற்றி வெற்றி பெற முடியுமா என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் சிலரே அஸீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகின்றனர். அசீம் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பல முறை சர்ச்சையில் சிக்கினார்.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில் தான் அசீம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் மரியாதை குறைவாக பேசுகிறார் என்றும், தனலட்சிமியை பொம்மை டாஸ்கின் போது தவறான இடத்தில் கையை வைத்து தள்ளினார் என்ற குற்றசாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்து அபியூஸர் அசீம் என்று பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து மகேஸ்வரி கூட தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்தில் அசீம் மற்றும் தனலட்சுமி வேட்டி ஒன்றில் பங்கேற்றபோது ‘அசீமை அப்யூசர் என்றால் விக்ரமனும் தான் அப்யூசர்.’விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் விளையாடும்போது என்னுடைய கால்களை பிடித்து இழுத்து விளையாடினார். மேலும் என்னுடைய உடையை இழுத்த நபருக்கு ஆதரவாக பேசினார். அதுவும் அப்யூஸ் தானே? அப்படியிருக்க அசீம் செய்தது மட்டுமே எப்படி அப்யூசாக இருக்க முடியும் என்று கூறினார் தனலட்சிமி.

-விளம்பரம்-

தனலட்சுமியின் இந்த பேச்சை அஸீமும் பாராட்டி கைதட்டினார். ஆனால், பொம்மை டாஸ்க்கின் போது அசீம் என்னை தவறான இடத்தில் தொட்டான் என்று தனலட்சுமி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தனலட்சுமியின் இந்த பேச்சு குறித்து பதிவிட்டு இருக்கும் Adk ‘ஒருவரை தவறாக தொடுவதற்கு, ஆரோக்யமான விளையாட்டின் போது துணி லேசாக கிழிவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல இந்த பிக் பாஸ் புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான். அதனால் பேட்டிகளில் மற்றவர்களை தரம்தாழ்த்த வேண்டாம். சக போட்டியாளர்களை பற்றி வன்மத்தை கக்குவதை விட்டுவிட்டு உங்களின் அடுத்த வேலைகளுக்காக மீடியாவை பயன்படுத்துங்கள். இந்த ஷோ முடிந்துவிட்டது,எனவே நிஜ வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். adkவின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ளார் அசீம்.

அதில் ”ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது முதலில் அதை யார் ஆரம்பித்தார்கள் என்பதை பாருங்கள் உங்களுக்கு அபிமான போட்டியாளர் குறை சொன்னால் அமைதியாக இருப்பீர்கள் இதுவே உங்களை சொன்னால் மட்டும் கொதிப்பீர்களா பிக் பாஸ் முடிந்து விட்டது நான் தற்போது என்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருக்கிறேன் உங்களின் புகழை சரியாக பயன்படுத்தி வளருங்கள் நண்பா’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதே போல மற்றொரு பதிவில் ‘சமயம் பார்த்து சாயம் பூசி சாதகமாய் சாயும் சகுனி அல்ல நான், ஏழை பணக்காரன் என பாகுபாடு இல்லாமல் ஒன்றுபோல் மேல் நோக்கி எரியும் தீபம். என்றும் என் பேச்சு ஒன்றுதான் ! “என் நண்பனாய் இருக்க தனி தகுதி தேவை இல்லை, என் எதிரியை இருக்க உனக்கொரு தகுதி இல்லை. வளர்த்துக்கொள்ள வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார் அசீம்.

Advertisement