பிக் பாஸ் சீசன்6ல் போட்டியாளராக பங்கேற்றுள்ள அசீம் மீண்டும் ஷிவின் குறித்து மோசமாக பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இதனால் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பிக் பாஸ் பல வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் “கானா காணும் காலங்கள்” டாஸ்கானது வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டாஸ்கில் முடிவில் 1 முதல் 10 வரை போட்டியாளர்கள் அவர்களே தரம் பிரித்து கொள்ளும்படி சொல்லப்பட்டது. இங்குதான் பிரச்னை ஆரம்பமானது.முதலில் அசீம் முதலாம் இடத்திற்கு வந்து நிற்க ஷிவின் மற்றும் விக்ரமன் தாங்கள் நேர்மையாக விளையாடியிருக்கிறோம் எங்களுக்கு தான் முதல் இடம் சரியாக இருக்கும் என பிக் பாஸிடம் கூற உடனே விக்கிரமனுக்கும் அசீமுக்கும் தரமான சண்டை நடந்தது.
அதற்கு பின்னர் ஷிவின் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அசீம் “நீ என்ன பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்ன வேண்டுமாலாலும் பேசு” எனக் அநாகரீகமாக பேச ஷிவின் உங்களுக்கு பேச தைரியம் இல்லை எனக் கூற அசீமுக்கும் ஷிவினிக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது. அசீம் என்னை தைரியம் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு மரியாதை கெட்டுவிடும் என்று விவாதிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இந்த விவாதம் சண்டையாக மாறவே “தைரியமில்லை என்றெல்லாம் சொல்லாத மூஞ்சிய பாரு ஆமைக்குஞ்சு அவிச்சு வச்ச மாதிரி இருந்து பேசுரா” என்று கூற மணிகண்டன் அசீமை சமாதானப்படுத்தினார். பின்னர் சண்டை ஓரளவு குறையவே ஷிவின் 9வது இடத்திற்கும், விக்ரமன் 10வது இடத்திற்கும் சென்று நின்றனர். ஆனால் ஷிவினை இப்படி தரை குறைவாக பேசிய அசீம் பேசியதை விஜய் டிவி மற்றும் ஓடிடியில் 1 மாணிநேர காட்சியில் காட்டவில்லை.
இப்படி வாராவாரம் மற்ற போட்டியாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் அசிமை வார இறுதியில் கமல் வருத்தெடுப்பதும், அப்போது தலையாட்டி விட்டு பின்னர் மீண்டும் தன்னுடைய அதே பாணியை அசீம் பின் தொடர்வதும் வாடிக்கையாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சிகள் கூட கடந்த வாரம் அசீம், விக்ரமன் மற்றும் சிவினிடம் நடந்து கொண்ட முறையை குறித்து கமல் கண்டித்து இருந்தார்.
ஆனாலும் தான் செய்தது தவறு இல்லை என்பது போலத்தான் அசீம் வாதாடி இருந்தார். மேலும், நான் வெளியில் எப்படி இருந்தது கிடையாது. ஏதாவது பிரச்சனை என்றால் கூட விலகிச் சென்று விடுவேன். இவ்வளவு வாதிட மாட்டேன் என்று அசீம் கூறி இருந்தார். ஆனால், அசீம் குறித்து அவருடன் நடித்த பல நடிகர்கள் அசீம் படப்பிடிப்பில் கூட எவ்வாறு சக நடிகர்களை தர குறைவாக பேசுவார்கள் என்று பல வீடியோக்களில் கூறியிருக்கிறார்கள்.
அந்த வீடியோக்களை தற்போது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் அசீம், ஷிவின் குறித்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசி இருக்கும் அசீம் ‘ஷிவின் எல்லாம் வெளியில் என்கிட்ட மாட்னா, ஓ### வா ஜூஸ் புழிஞ்சுடுவேன்’ என்று மோசமாக பேசி இருக்கிறார். அதை கேட்ட மைனா ‘நடுவுல எதோ சொன்னயே’ என்று அசீம் சொன்ன கெட்ட வார்த்தையை சுட்டிக்காட்டி இருக்கிறார்.