பிக் பாஸ் சீசன்6ல் நேற்று நடந்த டாஸ்கில் சக போட்டியாளரான ஷிவினை அசீம் தரக்குறைவாக பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இதனால் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பிக் பாஸ் பல வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் "கானா காணும் காலங்கள்" டாஸ்கானது வழங்கப்பட்டிருந்தது.
https://twitter.com/Azeemarmy2Army/status/1606336311513620488
இந்த நிலையில் டாஸ்கில் முடிவில் 1 முதல் 10 வரை போட்டியாளர்கள் அவர்களே தரம் பிரித்து கொள்ளும்படி சொல்லப்பட்டது. இங்குதான் பிரச்னை ஆரம்பமானது.முதலில் அசீம் முதலாம் இடத்திற்கு வந்து நிற்க ஷிவின் மற்றும் விக்ரமன் தாங்கள் நேர்மையாக விளையாடியிருக்கிறோம் எங்களுக்கு தான் முதல் இடம் சரியாக இருக்கும் என பிக் பாஸிடம் கூற உடனே விக்கிரமனுக்கும் அசீமுக்கும் தரமான சண்டை நடந்தது.
அதற்கு பிறகு பேசிய அசீம் இந்த முதல் இடத்தை கொடுக்க வேண்டும் என்று சொன்னால் நாம், அமுதவாணன், மணிகண்டன், எடிக்கே போன்றவர்களுக்கு மட்டும் தான் கொடுப்பேன் என்று சொல்ல ஷிவினுக்கும் அசீமிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்தனிடையே எடிகே தான் என்ன ஜோடி சேர்ந்து அசீமுடன் நடனமா ஆட போகிறேன் என்று கூறினார். இந்த நிலையில் விக்ரமனை அசீம் நீங்க கட்டப்பஞ்சாயத்து செய்யாதீர்கள் என்று கூற மீண்டும் சண்டை வெடித்து.
#Azeem ku thairiyam illaya .#Shivin solranga .#BiggBossTamil #BiggBossTamilseason6 #BiggBoss6Tamil #AzeemArmy pic.twitter.com/V1o5I9T12U
— Azeem army (@Azeemarmy2Army) December 23, 2022
அதற்கு பின்னர் ஷிவின் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அசீம் "நீ என்ன பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்ன வேண்டுமாலாலும் பேசு" எனக் அநாகரீகமாக பேச ஷினின் உங்களுக்கு பேச தைரியம் இல்லை எனக் கூற அசீமுக்கும் ஷிவினிக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது. அசீம் என்னை தைரியம் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு மரியாதை கெட்டுவிடும் என்று விவாதிக்க தொடங்கினார்.
https://twitter.com/Maddy_pm_here/status/1606294320608337921
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இந்த விவாதம் சண்டையாக மாறவே "தைரியமில்லை என்றெல்லாம் சொல்லாத மூஞ்சிய பாரு ஆமைக்குஞ்சு அவிச்சு வச்ச மாதிரி இருந்து பேசுரா" என்று கூற மணிகண்டன் அசீமை சமாதானப்படுத்தினார். பின்னர் சண்டை ஓரளவு குறையவே ஷிவின் 9வது இடத்திற்கும், விக்ரமன் 10வது இடத்திற்கும் சென்று நின்றனர். ஆனால் ஷிவினை இப்படி தரை குறைவாக பேசிய அசீம் பேசியதை விஜய் டிவி மற்றும் ஓடிடியில் 1 மாணிநேர காட்சியில் காட்டவில்லை.
இப்படி இருக்கும் போது அசீம் பேசியதை வீடியோவாக எடுத்த நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வெளியிட அசீமையும் அவருக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவியும் மக்கள் பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். மேலும் தொடகத்திலிருந்தே சக போட்டியாளர்களை அசீம் தரக்குறைவாக பேசி வரும் நிலையில் இந்த செயலினால் அசீமிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று கமலஹாசனையும், விஜய் டிவியும் டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.




