அந்த சீசன்ல அவர மட்டும் வெளியில் அனுப்புனீங்க, இவரையும் அனுப்புங்க – அசீம் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த நடிகை.

0
365
- Advertisement -

அசீமை வெளியேற்றாதது ஏன்? நடிகை ஸ்ரீபிரியா எழுப்பி இருக்கும் கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இதில் போட்டியாளராக அசீம் கலந்து கொண்டு இருக்கிறார். இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அசீம் சென்னையை சேர்ந்தவர். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்து மீடியாவுக்குள் நுழைந்தார்.

- Advertisement -

அசீம் குறித்த தகவல்:

இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஜீ தமிழில் வி.ஜே.வாக தான் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியல் மூலம் தான் பிரபலமானார். இந்த சீரியல் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி 2019 ஆம் ஆண்டு முடிவடைந்தது. பின் இவர் கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியலில் நடித்து இருந்தார். மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, காமெடி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் நடித்து இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம்:

தற்போது அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அசீம் ஓவராக தான் நடந்து கொண்டு இருக்கிறார். அதிகமாக பேசுவது, எல்லா விசயத்திலும் தலையிடுவது என்று இருக்கிறார். அதிலும், இவர் விக்ரமனிடம் போட்ட சண்டை வைரலாகிஇருந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் ஆயிஷாவிடம் நடந்து கொண்டது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர் ஆயிஷாவை வாடி போடி என தரைகுறைவாக பேசியிருக்கிறார். இதை பார்த்த பார்வையாளர்களுமே அசீம் குறித்து விமர்சித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அசீம் செய்த செயல்:

அதோடு பிக் பாஸ் அசீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கமல் நேரடியாக அசீம்க்கு ரெட் கார்டை கொடுக்காமல் சக போட்டியாளர்களிடம் கொடுத்து, ரெட் கார்டை யாருக்கு கொடுக்க விரும்புகிறீர்கள் என்று கூறியவுடன் பலரும் அசீம்க்கு தான் கொடுத்திருந்தார்கள். இதை அடுத்தாவது அசீமை கமல் வெளியே அனுப்புவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அசீமை மன்னித்து விளையாட அனுமதித்து இருந்தார்கள். இது பலருக்குமே அதிர்ச்சி அளித்திருந்தது. இதே போன்று இதற்கு முன் சீசனில் நடிகர் சரவணன் செய்ததற்கு போட்டியில் தொடர விடாமல் வெளியே அனுப்பி இருந்தார்கள்.

நடிகை ஸ்ரீபிரியா டீவ்ட்:

பெண் போட்டியாளர்களை அவமரியாதையாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாமே சரியாகிவிடுமா? இதெல்லாம் ஒரு நியாயமா? தவறுக்கு தண்டனை வேண்டாமா என்றெல்லாம் நேற்றைய எபிசோடை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகை ஸ்ரீபிரியா அவர்கள் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு சீசனில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பிக் பாஸ் அந்த நபரை வீட்டில் இருந்து வெளியேற்றி இருந்தது. ஆனால், அதே தவறை தற்போது அசீம் செய்திருக்கிறார். ஏன் வெளியே அனுப்பக்கூடாது? என்று கேட்டிருக்கிறார். இதற்கு பிக் பாஸ் தரப்பில் இருந்து என்ன முடிவெடுக்க போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement