விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த சீசனில் பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெரும் அதிர்ச்சியை கொடுத்து.இந்நிலையில் பிக் பாஸிற்கு பிறகு முதன் முறையாக லைவிற்கு வந்த அசீம் அந்த விடியோவில் பல தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். அவர் கூறுகையில் “பிக் பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் மணிகண்டனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
அதோடு பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டாதது ரட்சிதா என்றும், மகேஷ்வரி பாம்பு என்று, ஷிவின் அந்த பம்பாயை தூக்கி சாப்பிடும் கழுகு என்றும் கூறினார், மைனாவை முதலை என்றும், சிங்கம் என்று தன்னை தானே சொல்லிக்கொண்டார். பிக் பாஸில் நடக்கும் சண்டைகளை வைத்து மட்டுமே ஒருவரை எடை போடமுடியாது என்றும், நான் அந்த வீட்டில் இருப்பது முக்கியம் என்று செய்தாலும் நான் செய்யும் விஷியத்தில் நியாயம் இருக்கும் என்று தெரிந்து எனக்கு வாக்களித்த ஒவ்வொரு மக்களுக்கும், தாய்மார்களுக்கும், சிறிய குழந்தைகள் முதற்கொண்டு பெரியவரக்ள் வரை அனைவர்க்கும் நன்றி என்றும் கூறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பட்டத்தோடு வெளியில் வந்த அசீம் பிக் பாஸ் நிறைவடைந்து ஒரு வாரம் ஆகியும் எந்த ஒரு போட்டியும் கொடுக்காமல் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் குறிப்பாக இவர் பிரபல வேட்டையாளர் ஐயப்பன் ராமசாமி உடன் பங்கேற்ற வேட்டியின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பேட்டியில் பேசிய ரசிகன் நான் என்னதான் கோபப்பட்டாலும் அவதராக பேசினாலும் என் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் கடைசியில் மக்கள் ஓட்டு போட்டு தானே நான் வெற்றி பெற்று இருக்கிறேன். எனக்கு பிக் பாஸில் 69 சதவீதம் வாக்குகள் விழுந்து இருக்கிறது என்று பெருமையாக கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த ஐயப்பன் ராமசாமி ஓட்டு மட்டும் அனைத்தையும் தீர்மானித்து விடுமா ஒரு கடையில் திருக்குறளும் விற்கிறது ஆபாச புத்தகம் இருக்கிறது.
அங்கு ஆபாசப் புத்தகம் தான் அதிக அளவு விற்பனையாகிறது, இதனால் ஆபாச புத்தகம் தான் திருக்குறளை விட சிறந்தது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா என்று ஆசியமை கேள்விகளால் வாட்டி வதைத்திருக்கிறார் ஐயப்பன் ராமசாமி. மேலும், அறம் வென்றது என்று கமல் சாரே சொன்னார் அறம் என்பது நியாயமாக இருப்பது அதனால் தான் நான் வெற்றி பெற்றேன் என்று அசீம் கூற அதற்கு ஒரு திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறி இருக்கிறார் ஐயப்பன் ராமாசாமி.