வயது வித்யாசம் பார்க்காமல் அசீமை திட்டிய ஜனனி – இது தான் இவர் உண்மை முகம் என்று திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
197
- Advertisement -

அசீமை ஜனனி லூசு என்று திட்டி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 48 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜனனி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத புது முகங்களில் ஜனனியும் ஒருவர். இவர் இலங்கை தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர்.

- Advertisement -

ஜனனி குறித்த தகவல்:

இவர் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உணவு மற்றும் உடல் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

ஜனனி-அமுதவாணன்:

இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், நிகழ்ச்சியில் இவர் அமுதவாணனின் கை பாகையாக இருக்கிறார். இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அசீம் – ஜனனி சண்டை :

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அசிமை பார்த்து வயது வித்தியாசம் இல்லாமல் லூசு மாதிரி பேச வேண்டாம் என்று ஜனனி பேசியிருக்கிறார். இதைக் கேட்டு கோபமடைந்த அசீம், ஜனனியிடம் வாக்குவாதம் செய்ய அவரிடம் அப்படித்தான் சொல்லுவேன் என்று வாக்குவாதம் செய்து இருக்கிறார். ஜனனி எப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஜனனியின் செயல்பாடுகள் ரசிகர்களை செய்து வருவதால் இவருக்கு இருந்த பெயர் டேமேஜ் ஆகி கொண்டு வருகிறது.

Advertisement