அசீம் அந்த நடிகையை எப்படி திட்டினார் தெரியுமா ? – அஸீமுடன் நடித்த தேவி பிரியா சொன்ன ஷாக்கிங் தகவல்.

0
626
azeem
- Advertisement -

பிக் பாஸ் அசீமின் உண்மை முகத்தை சன் டிவி சீரியல் நடிகை போட்டு உடைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் கடந்த வாரம் அசல் வெளியேறி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, அசீம் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் திமிராகவும், அடாவடித்தனமாகவும், தன்னுடைய குரல் தான் ஒலிக்க வேண்டும் என்ற நினைப்பிலும் நடந்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

அசீம் குறித்த சர்ச்சை:

அதிலும் இவர், ஆயிஷாவை வாடி போடி என்று மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது குறித்து ரசிகர்கள் பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இதனால் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து விக்ரமனிற்கும் அசீமிற்கும் செட்டே ஆகவில்லை. எந்த ஒரு விஷயத்தையுமே இருவரும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்க் போட்டியில் நிவாசினி கீழே விழுந்ததற்கு காரணம் தனலட்சுமி தான் என்று கடுமையாக திட்டி இருந்தார் அசீம் .

அசீம் செய்த செயல்:

அது மட்டும் இல்லாமல் அத்துமீறி அசீம் கை வைத்ததாக தனலட்சுமி புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து விக்ரமன், அசீம் இடம் பயங்கரமாக வாக்குவாதம் செய்து இருந்தார். மேலும், கடந்த வாரம் அசீம் நடந்து கொண்டதை அடுத்து போட்டியாளர்கள் முழுவதுமே ரெட் கார்டு கொடுத்திருந்தார்கள். கடந்த மூன்றாவது வாரம் இறுதியில் கமல், அசிமை வெளுத்து வாங்கி இருந்தார். பின் குறும்படம் போட்ட பிறகு தான் செய்த தவறை உணர்ந்து அசீம், தனலட்சுமி இடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

தேவிப்பிரியா அளித்த பேட்டி:

அதேபோல் சிவினை கிண்டல் செய்ததற்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். இப்படி பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லாமல் வெளியிலேயும் அசீமிற்கு நிறைய ஹேட்டர்ஸ்கள் உருவாகியிருக்கிறார்கள். அதே சமயம் அவருக்கு ஆதரவாக சில ரசிகர்களும் இருக்கிறார்கள். கமல் கண்டித்த பிறகு அசீம் உடைய நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அசீம் குறித்து சீரியல் நடிகை பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர் பூவே உனக்காக. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தேவிப்பிரியா. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அசீம் குறித்து சொன்னது:

அதில் அவர் அசீம் குறித்து கூறியிருந்தது, சீரியலில் நடித்த நடிகை ஒருவரிடம் அசீம் சண்டை போட்டு இருந்தார். அந்த நடிகை யார்? என்று சொல்ல விரும்பவில்லை. அவருக்கு தமிழ் தெரியாது. அந்த நடிகை ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவரிடம் அசீம் மிகவும் மோசமாகவே சண்டை போட்டார். செட்டில் இருந்த எல்லோருமே அந்த பெண்ணை தான் சமாதானம் செய்தார்கள். ஹைதராபாத்தில் இருந்து வந்ததால் நீ பெரிய நடிகையா? என்றெல்லாம் அசீம் மரியாதை இல்லாமல் பேசி இருந்தார். அப்போது அனைவரும் பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக இருந்தோம். ஆனால், இப்போது அவர் அதே மாதிரி தனலட்சுமியை பேசியதற்கு ஆண்டவர் நல்ல அறிவுரை கொடுத்திருக்கிறார் என்று தேவிப்பிரியா கூறியிருந்தார்.

Advertisement