எங்க போனாலும் மாலை போட கூடவே ஆளே கூட்டிட்டு பொய்ட்ரீங்களா – ஆதாரத்துடன் சிக்கிய அசீம். இதோ புகைப்படங்கள்.

0
420
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

.இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது. அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார். விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வன்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

அதே போல பிக் பாஸ் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்தார். கோப்பையை வாங்கியதும் அசீம் கொண்டாட்டத்தில் ஆராவாரம் செய்ய அஸீமிடம் இருந்து ஒதுங்கி நின்ற கமல், விக்ரமன் அருகில் சென்று அவரை ஆஸ்வாசப்படுத்தினார். அதே போல என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் கடந்த இரண்டு தினங்களாக விக்ரமன் தோற்றத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விஜய் பாடல் வரிகளை போட்டு தன்னை தானே புகழ்ந்து அசீம் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற எடமே என்று வாரிசு படத்தில் வரும் தீ தளபதி பாடல் வரிகளை போட்டு தனக்கு தானே Fire விட்டு கொண்டு இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மக்கள் நாயகன் அசீம் போன்ற ஹேஷ் டேக்குகளை போட்டு இருக்கிறார். அஸீமின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பட்டம் வென்றதில் இருந்து பல இடங்களுக்கு கோப்பையுடன் செல்லும் அஸீமுடன் ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால், அசீம் எங்கு சென்றாலும் குறிப்பிட்ட அதே ஆட்கள் தான் அசீம் எங்கு சென்றாலும் இருக்கின்றனர். இதனை கண்டா நெட்டிசன்கள் எங்கு சென்றாலும் மாலை போட நபர்ககளையும் கூடவே கூட்டிக்கொண்டு சென்று விடுகிறீர்கலா என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement