பூங்கொத்து கொடுக்க வந்த சிறுவர்கள், அசீம் காட்டிய Attitude – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
126
Azeem
- Advertisement -

அன்போடு பூங்கொத்து கொடுக்க வந்த சிறுவர்களை கண்டுக்காமல் பிக் பாஸ் அசீம் செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சின்னத் திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அசிம். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்து மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஜீ தமிழில் வி.ஜே.வாக தான் சின்னத்திரை உலகில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இந்த சீரியல் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி 2019 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதோடு இது ஆண்டாள் அழகர் என்ற தொடரின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்காகவே இந்த சீரியலை பார்க்க ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அதன் பின் இவர் கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே உனக்காக என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து இருந்தார். அதற்குப் பிறகு அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இவர் ஏற்கனவே சீசன் 4-இல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு சீசன்கள் கழித்து ஆறாவது சீசனில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

பிக் பாஸ் வெற்றியாளர் அசிம்:

மேலும், இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இறுதிவரை அசீம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுதியிருந்தது. அது மட்டும் இல்லாமல் கமலஹாசனே பலமுறை அசிமிற்கு வார்னிங் கொடுத்திருந்தார். இதனால் இவர் இறுதி வரை வருவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியாகவே இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அசிமை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

காரணம், அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதம். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் சொல்வதற்கு ஏற்ப அசீம் டைட்டில் பட்டதை தட்டிச் சென்றிருந்தார். நிகழ்ச்சிக்கு பின் அசீம் மக்கள் நாயகன் என்ற பட்டத்தை தனக்குத்தானே போட்டுக்கொண்டு எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரியான ஆட்களை அழைத்துக் கொண்டு வெற்றி கோப்பையும் எடுத்துக்கொண்டு போட்டோ எடுக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து இருந்தார்கள். சமீபத்தில் கூட இவர் சீமானை சந்தித்து, எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற வசனத்தை போட்டிருந்தார். இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

அசீம் செய்த செயல்:

இந்த நிலையில் தற்போது அசிம் அவர்கள் மலேசியாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது அவரை அங்குள்ள மக்கள் வரவேற்று இருந்தார்கள். அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் அசிமை வரவேற்பதற்காக அன்புடன் பூங்கொத்து உடன் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், அதை கண்டும் காணாதது போல் அசிம் நின்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த சிறுவர்களை புறக்கணித்துவிட்டு பூங்கொத்தையும் வாங்காமல் அசீம் சென்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் இதுதான் மக்கள் நாயகன்? செய்யும் செயலா? நீங்கள் இன்னும் திருந்தவே இல்லையா? என்றெல்லாம் பயங்கரமாக திட்டி வருகின்றனர்.

Advertisement