ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த #ClownAzeem டேக் – விக்ரமன் அஸீமுக்கு கொடுத்த புதிய பெயர்.

0
213
azeem
- Advertisement -

அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் அசீம் கேப்டன் பதவியை வென்றார். அசீம் கேப்டன் ஆன உடனே பல அதிரடி மாற்றங்கள் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் :

இது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது. பின் வழக்கம் போல் பிக் பாஸ் இந்த வாரம் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது, பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டிருந்தது. தற்போது அதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து இந்த முறை கொடுத்து இருக்கிறார். பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும்.

- Advertisement -

அசீம் – அமுதவாணன் சண்டை :

ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அசீம் – அமுதவாணன் பயங்கரமாக சண்டை போட்டிருக்கும் சம்பவம் பெரும் வைரலானது.

மயங்கி விழுந்த அசீம் :

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கதிர் அசீம் ஆகிய இருவரும் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அசீம் தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாக கூறிக் கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ஏடிகே அஸீமிற்கு காபி போட்டு எடுத்து வந்திருந்தார். அப்போது அசின் எழுந்து அந்த காபியை வாங்க முற்பட்டபோது திடீரென்று மயங்கி கீழே விழுந்து விட்டார்.உயர் ரத்த அழுத்தம் காரணமாக தான் அசீம் இப்படி மயங்கி விழுந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர்.

-விளம்பரம்-

உண்மையா நாடகமா :

பின்னர் சிறிது நேரம் கழித்து அசின் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார். டாஸ்க்கின்படி அசீம் வெளியில் தான் தூங்க வேண்டும். ஆனால், அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்று சொன்னதால் ஏலியன் அணியில் இருப்பவர்கள் அவரை பெட் ரூமில் தூங்க அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அனைவரும் தூங்கிய பின்னர் எழுந்த அசீம் பூக்களை பறித்து தனது டாஸ்க்கை செய்துகொண்டு இருந்தார். தை தொடர்ந்து ஏலியன் அணியில் இருப்பவர்களும் அவரிடம் வாக்கு வாதம் செய்தனர்

Advertisement