அந்த Accidentல கார்ல இருந்தது பாலாஜி அப்புறம் பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் – யாஷிகா சொன்ன அந்த நபர் இவர் தானாம்.

0
2295
yashika
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை மாமல்லபுறம் அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி யாஷிகா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி பவனி என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும், யாசிகாவிற்கு முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அதி வேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவத்தில் பிக் பாஸ் போட்டியாளரான பாலாஜி முருகதாஸின் பழைய கதை ஒன்று அடிபட்டு இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில், கார் ஒன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது. அங்கு, சாலையோரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பரத் என்பவர் நின்றுகொண்டிருந்தார். அவர் மீது வந்த வேகத்தில் கார் மோதியுள்ளது.

- Advertisement -

இதில், அவர் படுகாயமடைந்தார்.காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்ததாகவும்விபத்து நடந்ததையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி, வேறு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.ஆனால், இந்த செய்தியை மறுத்த யாஷிகா, அது தன்னுடைய கார் இல்லை என்றும் என்னுடைய நண்பர்கள் செய்த விபத்து செய்தியை கேட்டு தான் அங்கே சென்றதாவும் கூறி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-20-628x1024.jpg

இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவம் குறித்து சில அதிர்ச்சியான தகவலை ஜோ மைக்கேல் கூறிய ஜோ மைக்கல் அந்த விபத்தை ஏற்படுத்தியது பாலாஜி தான் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இது குறித்து வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்ட பாலாஜி. தான் அந்த விபத்தை ஏற்படுத்தவில்லை, எனக்கும் அந்த விபத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் யாஷிகாவை, இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இந்த 2019 விபத்து குறித்து பழி போட, இதற்கு யாஷிகா, அந்த விபத்தை நான் செய்யவில்லை. அந்த விபத்தை ஏற்படுத்தியது பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் என்றும் உடன் இருந்தவர் பாலாஜி என்றும் இதை டி – நகர் காவல் நிலையத்திலோ அல்லது CCTV பதிவையோ சரி பாருங்கள் என்று ஷாக்கிங் தகவலை சொல்லியுள்ளார். அந்த பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் சுரேஷ் என்பவரின் மகன் சூர்யகுமார் என்று ஜோ மைக்கேல் கூறியுள்ளார்.

Advertisement