ஐஸ்வர்யா செய்த கொடுமை.! விபரீதத்தில் முடிந்த டாஸ்க்.! பிக் பாஸில் பாலாஜிக்கு நடந்த சோகம்.!

0
273

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தலைவியான பின்னர் பல்வேறு சர்ச்சைகள் நடந்தேறி வருகின்றன. ஐஸ்வர்யா செய்த செயல்களால் பாலாஜி மிகவும் மனம் நொந்து போய் இருந்தார். எப்போதும் சிறு விசயத்திற்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்பட்டு திட்டிவிடும் பாலாஜி நேற்று(ஜூலை 31) ஐஸ்வர்யா அத்தனை அடாவடிகள் செய்தும் மிகவும் பொறுமையாகவே அமர்ந்து கொண்டிருந்தார்.

Balaji

ஐஸ்வர்யா செய்த செயலை கண்டபோது பார்த்த ரசிகர்களுக்கே அதிக கோவத்தை ஏற்படுத்தியது. ஆனால், பாலாஜி கொஞ்சம் நிதானமாக தனது கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தது போலவே தெரிந்தது. மேலும், ஷாரிக்கிடமும், மஹத்திடம் பேசியபோது கூட ‘இந்த கோவத்தை அப்டியே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா செய்த சில செயல்களால் பாலாஜி உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் நேற்று(ஜூலை 31) சில உடல் நிலை சற்று சரி இல்லாமல் போகியுள்ளது. இதனால் பிக் பாஸ் மருத்துவ குழு அவருக்கு சிகிச்சையும் அளித்துள்ளது. பாலாஜிக்கு எதோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் சமீபத்தில் ஒளிபரப்பான மார்னிங் மசாலா வீடியோ ஒன்றில் பாலாஜியின் கையில் பளாஸ்டர் போட பட்டுள்ளது மூலம் தெரியவந்துள்ளது.

Bigg-Boss

இதன் மூலம் பாலாஜிக்கு கண்டிப்பாக ஏதோ ஒரு சிகிச்சையோ அல்லது அவரது பிபி-யை கட்டுப்படுத்த நரம்பில் ஊசியோ போடப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதே போல தற்போதைக்கு பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு டாஸ்கிலும் பங்குபெற போவது இல்லை என்றும் ஐஸ்வர்யா தலைவியாக இருக்கும் வரை பிக் பாஸ் வீட்டில் உன்ன போவது இல்லை என்றும் பொன்னம்பலத்திடம் கூறியுள்ளார் பாலாஜி.