லூசு..கொரங்கு..த்தூ… என கேவலமாக திட்டும் ராணி .! எல்லை மீறும் ஐஸ்வர்யா..!

0
342
Bigg-boss-aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பரபரப்பிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாக தான் கொண்டிருந்தது . ஆனால், இந்த வாரம் ஐஸ்வர்யா தலைவியான பிறகு கொஞ்சம் கதையே மாறிவிட்டது.

Aishwarya

ஐஸ்வர்யா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியான பின்னர் ஏதோ தலையில் கிரிடம் வைத்தார் போல கொஞ்சம் கர்வமாக இருந்த வந்தார். தற்போது அவருக்கு மேலும் சாவி கொடைத்துள்ளது போல அவருக்கு ராணி என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளார் பிக் பாஸ் அதுவும் ஹிட்லர் போன்ற ‘சர்வாதிகார ராணி ‘ என்று வேறு குறிப்பிட்டுவிட்டார்.

ஐஸ்வர்யா தலைவியான பின்னர் பாலாஜிக்கும், அவருக்கும் முதலில் வாக்குவாதம் துவங்கியது. அப்போது பாலாஜியை இந்த வாரம் வீட்டில் கெட்டவார்த்தை பேசக்கூடாது இந்த வாரம் நான் தான் தலைவி என்று கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டார் ஐஸ்வர்யா. ஆனால், நேற்று பாலாஜி,ஷாரிக்,ரித்விகா ஆகியோர் தன்னை பற்றி பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ஐஸ்வர்யா மிகவும் கேவலமாக பேசி கொண்டிருந்தார்.

Aishwarya-dutta

பாலாஜியை வயது வித்யாசம் பார்க்காமல் லூசு என்றும் குரங்கு என்றும் த்தூ என்று துப்பி திட்டிய ஐஸ்வர்யா ஒரு சில பீப் வார்தைகளையும் பயன்படுத்தினார். அதே போல ரித்விகாவையும் ஒரு சில தகாத வார்த்தைகளில் திட்டினார். ஆனால் அந்த வார்த்தைகள் மூயூட் செய்யப்பட்டது.

Bigg-Boss

தலைவியான பின்னர் பாலாஜி கேட்ட வார்த்தை பேசக்கூடாது என்று பாலாஜியிடம் வாய் கிழிய பேசிய ஐஸ்வர்யா, தலைவியான திமிரில் பாலாஜியை வயது வித்யாசம் பார்க்காமலும் ரித்விகாவை பெண் என்றும் பாராமலும் தரம் கேட்ட வார்த்தைகளை பயன்படுத்திய ஐஸ்வர்யா மீது மக்கள் பெரும் கோவத்தில் இருந்து வருகின்றனர்.