பிக் பாஸ் வீட்டில் விஜய் படத்தை கிண்டல் செய்த பாலாஜி..! மஹத் தான் காரணமா..?

0
970
balaji

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடேயே தற்போது லிஸ்டில் அபிமான நிகழ்ச்சியாக இருந்து வருவது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தான். இரண்டவது சீசனை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக பிரபலம் கிடைத்து விடும். அதனால் இதில் கலந்துகொள்ள பல்வேறு பிரபலங்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

Balaji-Bigg-Boss-Tamil-Season-2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தான் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.பாலாஜி பொதுவாகவே நகைச்சுவை குணம் கொண்டவர்,அவர் பங்குபெறும் நிகழ்ச்சியில் கூட சக நடிகர்களிடம் நகைச்சுவை கலந்துதான் பேசுவார்.பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அப்படித்தான் தன் இயற்கை குணம் மாறாமல் போட்டியாளர்களிடையே சகஜமாக பழகி வருகிறார்.

இதை தொடர்ந்து பிக் பாசில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மஹத்தை கலாய்த்துள்ளார்பாலாஜி.விஜய்யின் ஜில்லா படத்தில் விஜய்க்கு தாபியாக மஹத் நடித்திருப்பார்.அந்த படத்தை வைத்து மஹத்தை கலாய்த்துள்ளார் தாடி பாலாஜி.
பிக் பாஸ் போட்டியில் எலிமினேஷன் சுற்று வந்த பொது போட்டியாளர்கள் சிலர் மும்தாஜை குறிவைத்து நாமினேஷன் செய்தனர்.மும்தாஜ் எலிமினேட் ஆக இருந்தபோது மஹத் அழுதார்,இதை பாலாஜி கலாய்த்துள்ளார்.

Mahat-in-Bigg-Boss-House

மும்தாஜுக்காக மஹத் அழுதிருப்பார்,இதை பார்த்த பாலாஜி,ஜில்லா படத்தில் கூட மஹத் இப்படி நடிக்கவில்லை,ஆனால் இங்குதான் இப்படி நடிக்கிறான் என்றார்.இதை தொடர்ந்து விஜய்யின் ஜில்லா படத்தில் கூட இப்படி நடிக்கவில்லை, இங்கே முழுவதும் குல்லா போடுகிறான் என்று மஹத்தை கிண்டல் செய்துள்ளார.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.